நீருக்கடியில் வாழ்க்கை - மலைக்க வைக்கும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு )

  • 20 பிப்ரவரி 2018

இரண்டாம் உலகப் போரின் போது நீருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒரு பிரிட்டிஷ் கப்பலின் புகைப்படத்தை எடுத்த ஜெர்மன் புகைப்படக் கலைஞர் டோபியாஸ் ஃப்ரைட்ரிக், 2018 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படக் கலைஞர் என்ற விருதை பெற்றிருக்கிறார்.

எகிப்தின் ரஸ் முகம்மது கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் கலந்து கொண்ட 5,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Sea slugs with a moray eel in the background. படத்தின் காப்புரிமை ManBd UiDive/UPY 2018
Image caption அப்துல் ரகுமான் ஜமாலுதீனின் கடல் நத்தைகள் புகைப்படம்
Motorcycles inside the SS Thistlegorm. படத்தின் காப்புரிமை Tobias Friedrich/UPY 2018

'சைக்கிள் வார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், எஸ்.எஸ். திஸ்லெக்ரோம் என்ற பிரிட்டிஷ் கடற்படையின் வர்த்தக கப்பலில் மோட்டார் பைக்குகள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

சில வருடங்களாகவே இந்த புகைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால், ஒரே ஷாட்டில் எடுக்கமுடியாது என்பதால் காத்துக் கொண்டிருந்த ஃப்ரைட்ரிக், பல புகைப்படங்களை எடுத்து அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே புகைப்படமாக்கினார்.

"இது மிகவும் அசாதாரணமான ஷாட். இதுபோன்ற காட்சியை புகைப்படமாக உருவகப்படுத்துவதில் கலைத்திறனும், புகைப்பட திறமையும் உறுதுணையாக உதவியிருக்கிறது" என்று புகைப்பட தேர்வுக்குழுத் தலைவர் பாராட்டினார்.

Two swans feeding under the lake water. படத்தின் காப்புரிமை Grant Thomas/UPY 2018
Image caption உணவு தேடும் அன்னப்பறவைகளை படமாக்கியவர் கிராண்ட் தாமஸ்

இந்த புகைப்பட போட்டியில் மேக்ரோ, வைட் ஆங்கிள், பிஹேவியர், ரெக் (Macro, Wide Angle, Behaviour and Wreck Photography), பிரிட்டன் கடற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு என மூன்று பிரிவுகளும் என்று 11 பிரிவுகளில் புகைப்படங்கள் வகைப்படுத்தப்பட்டன.

A group of pike underwater. படத்தின் காப்புரிமை Tony Stephenson/UPY 2018
Image caption பிரபலமான ஸ்கூபா டைவிங் தளமான ஸ்டானி கோவ் என்ற இடத்தில் டோனி ஸ்டீபன்ஸன் எடுத்த புகைப்படம்
A humpback whale skyhopping. படத்தின் காப்புரிமை Greg Lecoeur/UPY 2018
Image caption செங்குத்தாக நீரில் இருந்து வெளிப்படும் திமிங்கிலத்தை படம் பிடித்தார் கிரேக் லீகோகோயூர்
Three seahorses backlit under the water. படத்தின் காப்புரிமை SHANE GROSS/UPY 2018
Image caption ஷேன் க்ரோஸின் கடல்குதிரைகளின் அரிய புகைப்படம்
Shark behaviourist Cristina Zenato surrounded by sharks in The Bahamas படத்தின் காப்புரிமை Fan Ping/UPY 2018
Image caption கரீபியன் கடலில் சுறாக்களை படம் பிடித்தவர் ஃபேன் பிங்
A coiled up conger eel. படத்தின் காப்புரிமை Songda Cai/UPY 2018
Image caption சோங்க்டா கை எடுத்த விலாங்குமீன் புகைப்படம்
A fish wedged between the bell and the tentacles of a jellyfish. படத்தின் காப்புரிமை Scott Gutsy Tuason/UPY 2018
Image caption இந்த அற்புதமான புகைப்படத்தை எடுத்தவர் ஸ்காட் கட்ஸி துவாசன்
A cormorant with a fish in its mouth. படத்தின் காப்புரிமை Filippo Borghi/UPY 2018
Image caption டோக்கியோவில் உள்ள ஈஸு தீபகற்பத்தில் ஃப்லிப்போ போர்கி எடுத்த புகைப்படம்
A sand tiger shark surrounded by millions of tiny fish படத்தின் காப்புரிமை Tanya Houppermans/UPY 2018
Image caption லட்சக்கணக்கான சிறிய மீன்கள் புடைசூழ இருக்கும் சுறாவை புகைப்படத்தில் சிறைபிடித்தார் தான்யா ஹூப்பென்மன்ஸ்
Humpback whales swimming under the water படத்தின் காப்புரிமை Simone Matucci/UPY 2018
Image caption கூன்முதுகு ((ஹம்பேக்) திமிங்கலங்கத்தை படம் பிடித்தவர் சிமோன் மட்டுசி
A bear hunting for salmon in the water. படத்தின் காப்புரிமை Mike Korostelev/UPY 2018
Image caption ரஷ்யாவில் உள்ள குரேலி ஏரியில் மீனுக்காக காத்திருக்க்கும் கரடி
A crocodile reflected on the surface of the water. படத்தின் காப்புரிமை Borut Furlan/UPY 2018
Image caption சூரிய வெளிச்சம் குறைந்த மாலை நேரத்தில் கியூபாவில் இந்த கடல் நீர் முதலைகளின் புகைப்படத்தை எடுத்தவர் போருட் ஃபுர்லன்

புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்