தென் கொரியத் திரைப்பட விழாவில் விஜய் நடித்த மெர்சல்

  • 21 ஏப்ரல் 2018
விஜய்

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி குறித்த வசனத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதனால் இந்த திரைப்படம் மிகவும் பிரபலமானது. மெர்சல் வெளியாகி ஐந்து மாதங்களை கடந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற நான்காவது பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப் படத்திற்கான விருதை வென்றது மெர்சல்.

இதைத் தொடர்ந்து தென் கொரியாவில் நடைபெறவுள்ள 22வது புச்சென் சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் அறிவித்துள்ளது. இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

4தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இந்தி திரைப்படம் ‘குயின்‘

ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் குயின். இதில் கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது அந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தாயாரிக்கப்படுகிறது.

அதில் கங்கனா ரனாவத் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் - காஜல் அகர்வால், தெலுங்கில் - தமன்னா, மலையாளத்தில் - மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கின்றனர்.

அதேபோல் தமிழிலும், கன்னடத்திலும் ரமேஷ் அரவித் இயக்குகிறார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நீலகண்டா இயக்கிவந்தார்.

பாரீஸ் நகரில் இந்த படங்களுக்கான ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று வந்தன. அப்போது தமனாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு படத்தில் இருந்து நீலகண்டா விலகினார்.

அதன் பின்பு ரமேஷ் அரவிந்திடமே அந்த தெலுங்கு படத்திற்கான பொறுப்பும் வழங்கப்பட்டது. முதல் கட்ட காட்சிப்படுத்தல் வெளிநாடுகளில் நடைபெற்று முடிந்த நிலையில் மைசூரில் சில காட்சிகளை படமாக்கினர்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அத்தோடு படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என்று கூறியுள்ளனர்.

தமிழில் உருவாகும் அந்த படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. குயின் படத்தின் ரீமேக்கினை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுகளையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார்.

வசந்த் ரவி கதாநாயகனாகநடிக்கும் படத்தில் மிஷ்கின்

ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர். மனோஜ் குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிடம் பணியாற்றிய அருண்மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்படியான திரைக்கதை அமைத்து அதிரடி திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக் காட்சிகளுக்கும் ஒவ்வொரு வகையான சண்டை அமைப்பை உருவாக்குகிறார் தினேஷ்சுப்பராயன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: