காலா படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

  • 20 ஏப்ரல் 2018
படத்தின் காப்புரிமை LYCA

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாகுமென அப்படத்தைத் தயாரிக்கும் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் காலா என்ற கரிகாலன். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் வேலைகள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். முன்னதாக இந்தப் படம் ஏப்ரல் 27ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்களின் கட்டணங்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய தயாரிப்பாளர்கள், மார்ச் 1ஆம் தேதி முதல் படங்கள் வெளியாகாது என அறிவித்தனர். நேற்று முன்தினம் இந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இன்றிலிருந்து படங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன.

இந்த நிலையில்தான், ஏப்ரல் 27ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி காலா வெளியாகுமென படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் இரண்டாவது படம் இது.

2.0 படத்தின் க்ராஃபிக்ஸ் பணிகள் நடந்துவருவதால், இதுவரை அந்தப் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: