நவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம்

Rajini ரஜினி படத்தின் காப்புரிமை Getty Images

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகுமென அந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஏப்ரலில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது.

மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்தப் படம் ஒரு அறிவியல் - புனை கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2.0 படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சனும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள முப்பரிமாணப் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் 2.0 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் தனது பகுதிகளை முடித்துக்கொடுத்த ரஜினிகாந்த் அதற்குப் பிறகு ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடித்து, அந்தப் படமும் வெளியாகிவிட்டது.

அதற்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்துவருகிறார்.

இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரலிலும் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு டிசம்பரிலும் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்புப் பணிகள் முடிவடையாததால், படம் வெளியாகும் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்