கண்ணைக் கவரும் இந்த ஓவியங்கள் 'உயிரோடு' நடமாடியது எப்படி?

  • 31 ஜூலை 2018

கண்காட்சிகளில் கலைப்படைப்புகளை நீங்கள் பார்த்துக்கொண்டே நடக்கலாம். ஆனால் கண்காட்சியில் ஓவியங்கள் நடந்து செல்வதை பார்த்திருக்கிறீர்களா? இவை மனித உடல்களில் வரையப்பட்ட உயிரோவியங்கள்…

ஆஸ்டிரியாவின் க்லாகேன்ஃபர்ட் நகரில் அண்மையில் நடமாடும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. அந்த நாட்டில் நடைபெறும் 21வது உலக உடலோவிய விழா இது.

படத்தின் காப்புரிமை Reuters

ஓவியர்கள் தங்கள் மாடல்களின் உடலில் மனம் கவரும் வண்ணம், வண்ணமயமான ஓவியங்களை தீட்டி, அவர்களை உயிரோவியங்களாக உலாவ விட்டனர். இந்த கலைப்படைப்புகள் காண்போரின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டன.

படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
படத்தின் காப்புரிமை Reuters
Image caption 1998ஆம் ஆண்டு இந்த கலைவிழா தொடங்கப்பட்டது. தற்போது 50 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு விருதும், பரிசும் வழங்கப்படுகின்றன. ஏர்பிரஷிங், சிறப்பு மெருகூட்டல் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்), முக ஓவியம் உட்பட 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த மாடல்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்திருப்பதுபோல் முதல் தோற்றத்தில் தோன்றும். ஆனால் கவனமாக பார்த்தால், வண்ண ஓவியங்களே அவர்கள் உடல்களை அலங்கரித்திருப்பது தெரியும்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஓவியர் ஒருவர் தனது மாடலின் உடலில் தூரிகையால் ஓவியம் தீட்டுகிறார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption விருது வழங்கப்படும் சில பிரிவுகளில் பங்கேற்கும் ஓவியங்களை தீட்டுவதற்கு இரு நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த திருவிழாவில் தினமும் ஒரு மையக் கருத்தின் அடிப்படையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption முக ஓவியம் என்ற பிரிவில் இடம்பெற்ற கலைப் படைப்புகள் மிகவும் சிறப்பாக இருந்தன. கலைஞர்கள் தங்கள் மாடல்களின் முகங்களிலும், கழுத்திலும் அழகான படங்களை வரைந்திருந்தார்கள்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption உயிரோவியங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இருக்கின்றன. பேசும் உயிரோவியங்கள் பேசாமலேயே பல கதைகளை கூறுகின்றன.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption தலையில் பட்டாம்பூச்சி பறக்கிறது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption உடலின் மேல் ஓவியம், தலைக்கு மேல் பறக்கும் பட்டாம்பூச்சி
படத்தின் காப்புரிமை Reuters
Image caption கைக்குள் முகம்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த திருவிழாவில் உடலோவியம், ஒப்பனை, புகைப்படம், சிறப்பு மெருகூட்டல் (ஸ்பெஷல் எஃபக்ட்), ஏர்பிரஷ் போன்றவற்றிற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்