இந்தியாவில் ஆபாசப் படத்துறையை அனுமதிக்க வேண்டுமா? - சன்னி லியோனி பேட்டி

படத்தின் காப்புரிமை Getty Images

சன்னி லியோனி பற்றிய இணையதள தொடரான 'கரஞ்சித் கௌரில்' வரும் ஒரு காட்சியில் பத்திரிகையாளர் ஒருவர், சன்னி லியோனிடம் "ஆபாசப்பட நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டார்.

"இரண்டுக்கும் தைரியம் என்ற ஒற்றுமை உள்ளது" என்று சன்னி லியோனி பதிலளித்திருந்தார்.

நான் சன்னி லியோனியை மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் நேர்காணலுக்காக சந்தித்தபோது, அவரிடம் உள்ள அந்த 'தைரியத்தை' அவரது நடை, முகம், பதில்களின் மூலம் காண முடிந்தது.

அப்போது அந்த இணையதள தொடருக்கான நேர்க்காணலை படம்பிடிப்பது சவாலானதாக இருந்ததாக அவர் என்னிடம் கூறினார்.

"அந்த பத்திரிகையாளர் கேட்ட கேள்விகள் மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், இதை மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருந்ததால்தான் அந்த கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்" என்று சன்னி லியோனி கூறினார்.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியாவில் இணையதளத்தில் மிகவும் தேடப்பட்ட நபராக சன்னி உள்ளார். பெரும்பாலான மக்கள் சன்னி லியோனியை பார்ப்பதற்கும், அவரை பற்றி தெரிந்துகொள்வதற்கும் விரும்பினாலும், அவரைப் பற்றிய தங்களது எண்ணத்தை மக்கள் ஏற்கனவே மனதில் வரைந்துவிட்டார்கள்.

மக்களிடையே இதுபோன்ற எண்ணம் உருவாவதற்கு தானே காரணம் என்று சன்னி நம்புகிறார்.

"என்னைப் பற்றியும், நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றியும் நான் நேர்மையாக இருக்கிறேன். ஆனால், மக்கள் என்னுடைய கடந்த காலத்தை தொடர்புப்படுத்தி மட்டுமே என்னை பார்க்கிறார்கள். மக்களிடையே அது போன்ற எண்ணம் உருவாவதற்கு நான்தான் காரணம் என்று நம்புறேன். இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பரிணமிக்கிறார்கள், அதை மக்கள் உணருவார்கள் என்று நம்புகிறேன்."

தொடக்கத்தில் பாலிவுட் திரைப்படங்களில் "குத்தாட்டப் பாடலில்" நடித்த சன்னி, தற்போது சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனது சொந்த வாசனை திரவிய தயாரிப்பான 'தி லஸ்ட்' ஐ (இச்சை என்று பொருள் தரும் சொல்) அவர் அறிமுகப்படுத்தினார்.

வாசனை திரவிய தயாரிப்புக்கு வைக்கப்பட்டுள்ள பெயர், அவரைப் பற்றிய கடந்தகால எண்ணத்தை மக்களிடையே மீண்டும் ஏற்படுத்துமா என்று அவரிடம் கேட்டேன்.

அதை மறுத்த சன்னி, தனது வயதில் வாசனை திரவியத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும், தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தபோது, இந்த பெயரையே தான் விருப்பியதாகவும் அவர் கூறினார்.

"செடுஷன் அல்லது ஃப்யர், ஐஸ் போன்ற பெயர்களைத்தான் மற்ற தயாரிப்பாளர்களும் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் கூறினார்.

சன்னி லியோனியின் இயற்பெயர் கரஞ்சித் கௌர் ஆகும்.

ஆபாசப்பட திரையில் பணியாற்றிய சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பில் 'கௌர்' என்ற வார்த்தை இடம் பெறுவதற்கு தீவிர சீக்கிய மத அமைப்பான, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (SGPC), அது சீக்கிய மதத்தின் முக்கிய வார்த்தைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறியதுடன், எதிர்ப்பும் தெரிவித்தது.

இது குறித்து சன்னியிடம் கேட்டதற்கு, அந்த பெயரை தனது பெற்றோர்கள் சூட்டியதாகவும், இதே பெயர்தான் தனது கடவுச்சீட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

"எப்போதுமே என்னுடைய உண்மையான பெயர் கரஞ்சித் கௌர்தான். சன்னி என்ற பெயரை நான் செய்யும் தொழிலுக்காக மட்டும்தான் பயன்படுத்தினேன்" என்று மேலும் கூறினார்.

தான் ஆபாசப்படத் துறையில் பணியாற்றியதற்கு சன்னி லியோன் என்றுமே வெட்கப்பட்டதில்லை. மேலும், தானே விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுத்ததாக அவர் பல முறை கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் ஆபாசப்படங்களை பார்ப்பதற்கு இந்தியாவில் தடையேதும் இல்லை. ஆனால், ஆபாசமான உள்ளடக்கத்தை தயாரிப்பதற்கும்/ பகிர்வதற்கும் சட்டரீதியாக தடை உள்ளது.

உலகிலேயே ஆபாசப்படத்தை அதிகம் பார்ப்பவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடாவுக்கு அடுத்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக பிரபல ஆபாசப்பட இணையதளமான போர்ன்ஹப் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை T SERIES

இந்தியாவில் ஏன் ஆபாசப்படத் துறை அனுமதிக்கப்பட வேண்டும்?

சற்றும் யோசிக்காத சன்னி, "இதில் நான் முடிவெடுப்பதற்கு ஒன்றுமில்லை. இந்திய அரசாங்கமும், அதன் மக்களும்தான் தங்களுக்கு எது வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

ஆபாசப்படத்துறை பாலியல் உறவு சார்ந்த உரையாடல்களை இயல்பாக்க உதவுகிறதா? அமெரிக்காவில் இதுகுறித்த உங்களது அனுபவம் என்ன?

தனது தேர்வு எவர் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கூடாது என்றும், சமூகத்தின் கருத்து குடும்பங்களாலும், ஒரு பெண்ணின் கருத்து அவரை அவர்களது பெற்றோர் வளர்க்கும் விதத்தை பொறுத்தும் அமைகிறது என்றும் அவர் கூறினார்.

ஆபாசப்படத்துறையில் இணையும் சன்னியின் முடிவுக்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், தனது பெற்றோர் தன்னை ஒரு சுதந்திரமான பெண்ணாக வளர்த்ததனால்தான் தன்னால் சுயமாக முடிவுகளை எடுக்கமுடிந்தது என்று நம்புவதாக சன்னி லியோன் கருதுகிறார்.

தற்போது சன்னிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், இரண்டு ஆண் குழந்தைகளை வாடகைத்தாயின் மூலம் பெற்றெடுத்தார்.

உங்களது குழந்தைகள் அவர்களது வாழ்க்கையில் சுயமாக முடிவுகளை எடுப்பதற்கு சுதந்திரம் அளிப்பீர்களா?

"கண்டிப்பாக, அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும், செவ்வாய் கிரகத்துக்கு செல்லவேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆனால், தங்களது வாழ்க்கையில் முடிவுகளையும், பயணத்தையும் அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER

எனது கடைசி கேள்வி கிட்டத்தட்ட மிகவும் சங்கடமானது. சன்னி லியோனை பற்றி கரஞ்சித் கௌர் பதில் அளிக்கும் வகையில் அந்த கேள்வி இருந்தது.

உங்களது கடந்தகால தொழிலை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்க முடியுமா?

சன்னி அந்த கேள்வியை விரும்பவில்லை. ஆனால், சிந்தனை அவரது மனதை கடந்துபோனது போல் இல்லை.

அவரது கடந்தகால வாழ்க்கை முடிவுகளின் வீழ்ச்சி மற்றும் அதன் காரணமாக மக்களின் மனதில் உருவான மனப்பான்மை, உருவம் ஆகியவற்றைக் கொண்டு அவர் வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால், தனது அதே தைரியத்துடன், 'என்னுடைய பொதுவான கவலைகளில் தற்போது அது இல்லை' என்று சன்னி லியோன் கூறினார். நீண்டகாலமாக தாயாவதன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தற்போது அந்த அனுபவத்தின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறார்.

மேலும், சரியான நேரம் வரும்போது, தனது வாழ்க்கையை பற்றி குழந்தைகளிடம் நேர்மையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: