உலகின் மிகச்சிறந்த 100 பிற மொழி திரைப்படங்கள் - பிபிசி பட்டியல் வெளியீடு

BBC CULTURE'S 100 GREATEST FORIEGN FILM LIST

மூன்று வருடத்திற்கு முன்னதாக பிபிசி கல்ச்சர் (BBC Culture) மிகச்சிறந்த 100 அமெரிக்க திரைப்படங்களை கண்டறிவதற்காக முதல்முறையாக மிகப்பெரிய அளவில் விமர்சகர்கள் மூலம் ஓட்டெடுப்பை நடத்தியது.

அதன்பிறகு 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைகள் குறித்து ஒரு ஓட்டெடுப்பை நடத்தியது.

இவ்வருடம் ஹாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சினிமாவை கண்டறியும் முயற்சியை எடுப்பதற்கு சரியான சமயம் வந்ததாக பிபிசி உணர்ந்தது. இதையடுத்து விமர்சகர்களிடம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படங்களை தவிர்த்த மற்ற திரைப்படங்களில் அவர்களை மிகவும் கவர்ந்த சினிமாக்களை பட்டியலிடுமாறு கூறி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதனடிப்படையில் பிபிசி கல்ச்சரின் நூறு சிறந்த அந்நிய மொழி திரைப்படங்களை சமீபத்தில் பிபிசி இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த விமர்சகர்கள் கலந்துகொண்டார்கள். 43 நாடுகளைச் சேர்ந்த 209 விமர்சகர்கள் இதில் கலந்துகொண்டார்கள். அசாதாரணமான பன்முகத்தன்மைக்கும் உலகம் முழுவதுமுள்ள திரைப்படங்களின் வளமைக்கும் தலைவணங்கும் விதமாக இந்த வாக்கெடுப்பு இருக்கிறது.

வாக்கெடுப்பின் முடிவில் 67 வெவ்வேறு இயக்குனர்களின் திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 24 நாடுகளைச் சேர்ந்த 19 வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைபபடங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பிரெஞ்சு சினிமாக்கள்தான் சர்வதேச அளவில் விமர்சகர்கள் மத்தியில் அதிகளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பதேர் பாஞ்சாலி

பட மூலாதாரம், PATHER PANJALAI MOVIE POSTER

பிபிசி கல்ச்சரின் நூறு சிறந்த அந்நிய மொழி படங்கள் பட்டியலில் 27 திரைப்படங்கள் பிரெஞ்சு மொழியைச் சேர்ந்தவை. 12 மாண்டரின் மொழியைச் சேர்ந்தது. இத்தாலி மற்றும் ஜப்பானிய மொழிகளைச் சேர்ந்த தலா 11 திரைப்படங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பெலருசியன், ரோமானியன், வோலஃப் உட்பட பல்வேறு மொழி படங்கள் தலா ஒன்று இப்பட்டியலில் உள்ளன.

இந்த பட்டியலில் ஏமாற்றம் விளைவிக்கும் ஒரு சேதி என்னவெனில் பெண்கள் நேரடியாக இயக்கிய அல்லது இணை இயக்குனராக பணிபுரிந்த திரைப்படங்கள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. மொத்தமாக 4 திரைப்படங்கள் மட்டுமே இப்பட்டியலில் உள்ளது.

ஆனால் ஆண் விமர்சகர்களை விட பெண் விமர்சகர்களை அதிகம் தொடர்பு கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் விமர்சகர்களை தொடர்பு கொண்டபோது அதில் சுமார் 45% அளவு பெண் விமர்சகர்கள் இருந்தனர்.

ஒரு புள்ளிவிவரத்தை நாங்கள் உற்றுநோக்கியபோது எங்களது பட்டியலில் கால் பாதி திரைப்படங்கள் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்திருந்தன.

11 ஜப்பான் திரைப்படங்கள், 6 சீன மொழி திரைப்படங்கள், 4 தைவான் திரைப்படங்கள், 3 ஹாங்காங் திரைப்படங்கள், ஒரு தென் கொரிய திரைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த படம் செவன் சாமுராய். ஜப்பானைச் சேர்ந்த அகிரா குரசோவாதான் இதன் இயக்குநர்.

உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமர்சகர்கள் இத்திரைப்படத்தை விரும்பியுள்ளனர்.

நாங்கள் அணுகிய விமர்சகர்களில் இருந்த ஆறு ஜப்பானிய விமர்சகர்களும் ஒரு குரசோவா திரைப்படத்திற்கும் வாக்களிக்கவில்லை.

ஆகவே, கலாசாரம் என்பது எல்லைகளுக்கு உட்பட்டதல்ல மேலும் மொழி என்பது சிறந்த திரைப்படத்தை ரசிக்க ஒரு தடையில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இப்பட்டியலில் முதலிடத்தில் செவன் சாமுராய், இரண்டாவது இடத்தில் பைசைக்கிள் தீவ்ஸ், மூன்றாவது இடத்தில் டோக்கியோ ஸ்டோரி, நான்காவது இடத்தில் ராஷோமான், ஐந்தாவது இடத்தில் தி ரூல்ஸ் ஆஃப் தி கேம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இப்பட்டியலில் ஒரே ஒரு இந்திய திரைப்படம் இடம்பெற்றுள்ளது. வங்காள மொழியில் 1955-ல் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

எப்படி தரவரிசைப்படுத்தப்பட்டது?

இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிபிசி கல்ச்சர் விமர்சகர்கள், திரை பிரபலங்கள், திரைப்பட கல்லூரிகள் உள்ளிட்டவற்றை அணுகியது. ஒவ்வொரு விமர்சகரும் 10 திரைப்படத்துக்கு ஒட்டு போடமுடியும் என்பது விதி. அவர்கள் வரிசைப்படுத்தும் விதத்தில் அத்திரைப்படங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

உதாரணமாக ஒரு விமர்சகர் ஒரு திரைப்படத்தை பத்தாவதாக வரிசைப்படுத்தினால் அதற்கு ஒரு புள்ளிகள். ஒன்பதாவதாக தேர்ந்தெடுத்தால் இத்திரைப்படத்திற்கு இரண்டு புள்ளிகள். அவர் முதல் இடம் கொடுக்கும் திரைப்படத்திற்கு 10 புள்ளிகள். இந்த அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டது.

சிறந்த 100 திரைப்படங்கள்

100. Landscape in the Mist (Theo Angelopoulos, 1988)

99. Ashes and Diamonds (Andrzej Wajda, 1958)

98. In the Heat of the Sun (Jiang Wen, 1994)

97. Taste of Cherry (Abbas Kiarostami, 1997)

96. Shoah (Claude Lanzmann, 1985)

95. Floating Clouds (Mikio Naruse, 1955)

94. Where Is the Friend's Home? (Abbas Kiarostami, 1987)

93. Raise the Red Lantern (Zhang Yimou, 1991)

92. Scenes from a Marriage (Ingmar Bergman, 1973)

91. Rififi (Jules Dassin, 1955)

90. Hiroshima Mon Amour (Alain Resnais, 1959)

89. Wild Strawberries (Ingmar Bergman, 1957)

88. The Story of the Last Chrysanthemum (Kenji Mizoguchi, 1939)

87. The Nights of Cabiria (Federico Fellini, 1957)

86. La Jetée (Chris Marker, 1962)

85. Umberto D (Vittorio de Sica, 1952)

84. The Discreet Charm of the Bourgeoisie (Luis Buñuel, 1972)

83. La Strada (Federico Fellini, 1954)

82. Amélie (Jean-Pierre Jeunet, 2001)

81. Celine and Julie go Boating (Jacques Rivette, 1974)

80. The Young and the Damned (Luis Buñuel, 1950)

79. Ran (Akira Kurosawa, 1985)

78. Crouching Tiger, Hidden Dragon (Ang Lee, 2000)

77. The Conformist (Bernardo Bertolucci, 1970)

76. Y Tu Mamá También (Alfonso Cuarón, 2001)

75. Belle de Jour (Luis Buñuel, 1967)

74. Pierrot Le Fou (Jean-Luc Godard, 1965)

73. Man with a Movie Camera (Dziga Vertov, 1929)

72. Ikiru (Akira Kurosawa, 1952)

71. Happy Together (Wong Kar-wai, 1997)

70. L'Eclisse (Michelangelo Antonioni, 1962)

69. Amour (Michael Haneke, 2012)

68. Ugetsu (Kenji Mizoguchi, 1953)

67. The Exterminating Angel (Luis Buñuel, 1962)

66. Ali: Fear Eats the Soul (Rainer Werner Fassbinder, 1973)

65. Ordet (Carl Theodor Dreyer, 1955)

64. Three Colours: Blue (Krzysztof Kieślowski, 1993)

63. Spring in a Small Town (Fei Mu, 1948)

62. Touki Bouki (Djibril Diop Mambéty, 1973)

61. Sansho the Bailiff (Kenji Mizoguchi, 1954)

60. Contempt (Jean-Luc Godard, 1963)

59. Come and See (Elem Klimov, 1985)

58. The Earrings of Madame de… (Max Ophüls, 1953)

57. Solaris (Andrei Tarkovsky, 1972)

56. Chungking Express (Wong Kar-wai, 1994)

55. Jules and Jim (François Truffaut, 1962)

54. Eat Drink Man Woman (Ang Lee, 1994)

53. Late Spring (Yasujirô Ozu, 1949)

52. Au Hasard Balthazar (Robert Bresson, 1966)

51. The Umbrellas of Cherbourg (Jacques Demy, 1964)

50. L'Atalante (Jean Vigo, 1934)

49. Stalker (Andrei Tarkovsky, 1979)

48. Viridiana (Luis Buñuel, 1961)

47. 4 Months, 3 Weeks and 2 Days (Cristian Mungiu, 2007)

46. Children of Paradise (Marcel Carné, 1945)

45. L'Avventura (Michelangelo Antonioni, 1960)

44. Cleo from 5 to 7 (Agnès Varda, 1962)

43. Beau Travail (Claire Denis, 1999)

42. City of God (Fernando Meirelles, Kátia Lund, 2002)

41. To Live (Zhang Yimou, 1994)

40. Andrei Rublev (Andrei Tarkovsky, 1966)

39. Close-Up (Abbas Kiarostami, 1990)

38. A Brighter Summer Day (Edward Yang, 1991)

37. Spirited Away (Hayao Miyazaki, 2001)

36. La Grande Illusion (Jean Renoir, 1937)

35. The Leopard (Luchino Visconti, 1963)

34. Wings of Desire (Wim Wenders, 1987)

33. Playtime (Jacques Tati, 1967)

32. All About My Mother (Pedro Almodóvar, 1999)

31. The Lives of Others (Florian Henckel von Donnersmarck, 2006)

30. The Seventh Seal (Ingmar Bergman, 1957)

29. Oldboy (Park Chan-wook, 2003)

28. Fanny and Alexander (Ingmar Bergman, 1982)

27. The Spirit of the Beehive (Victor Erice, 1973)

26. Cinema Paradiso (Giuseppe Tornatore, 1988)

25. Yi Yi (Edward Yang, 2000)

24. Battleship Potemkin (Sergei M Eisenstein, 1925)

23. The Passion of Joan of Arc (Carl Theodor Dreyer, 1928)

22. Pan's Labyrinth (Guillermo del Toro, 2006)

21. A Separation (Asghar Farhadi, 2011)

20. The Mirror (Andrei Tarkovsky, 1974)

19. The Battle of Algiers (Gillo Pontecorvo, 1966)

18. A City of Sadness (Hou Hsiao-hsien, 1989)

17. Aguirre, the Wrath of God (Werner Herzog, 1972)

16. Metropolis (Fritz Lang, 1927)

15. Pather Panchali (Satyajit Ray, 1955)

14. Jeanne Dielman, 23 Commerce Quay, 1080 Brussels (Chantal Akerman, 1975)

13. M (Fritz Lang, 1931)

12. Farewell My Concubine (Chen Kaige, 1993)

11. Breathless (Jean-Luc Godard, 1960)

10. La Dolce Vita (Federico Fellini, 1960)

9. In the Mood for Love (Wong Kar-wai, 2000)

8. The 400 Blows (François Truffaut, 1959)

7. 8 1/2 (Federico Fellini, 1963)

6. Persona (Ingmar Bergman, 1966)

5. The Rules of the Game (Jean Renoir, 1939)

4. Rashomon (Akira Kurosawa, 1950)

3. Tokyo Story (Yasujirô Ozu, 1953)

2. Bicycle Thieves (Vittorio de Sica, 1948)

1. Seven Samurai (Akira Kurosawa, 1954)

முக்கிய குறிப்பு:

பிபிசி கல்ச்சர் திரைப்படங்கள் வாக்கெடுப்புகளின் நோக்கம் ஒரு விவாதத்தையும் நல்ல திரைப்படங்களை கண்டறிய வேண்டும் என்பதே. இதுதான் மிகச்சிறந்த நூறு படங்கள் என எந்தவொரு பட்டியலும் உறுதியாக கூற முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.

ஆகவே எதாவது திரைப்படங்கள் விடுபட்டிருந்தால்

#WorldFilm100 என்ற ஹேஷ்டேகில் பிபிசி கல்ச்சர் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தெரியப்படுத்துங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: