'நாங்களும் காமெடி செய்வோம்' சிரிப்பூட்டும் விலங்கு புகைப்படங்கள்

அணில் ஒன்று அதிர்ச்சியடையும் விதமான ஓர் புகைப்படம் இந்த வருடத்துக்கான ஒட்டுமொத்த காமெடி வைல்டுலைஃப் போட்டோகிராபி விருதை வென்றுள்ளது.

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய புகைப்படங்களில் புளோரிடாவின் டாம்பாவைச் சேர்ந்த மேரி மெக்கோவன் பரிசை தட்டிச் சென்றார்.

வெறுப்படைந்து காணப்படும் கரடி, சிரிக்கும் சுறா, மயில் போல காட்சியளிக்கும் காண்டாமிருகம் உள்ளிட்ட புகைப்படங்களும் இப்போட்டியில் இருந்தன.

காமெடி செய்த விலங்குகளை 'கிளிக்'கிய புகைப்படவியலாளர்களின் சில புகைப்படங்களை இங்கே பிபிசி நேயர்களுக்காக பகிர்கிறோம்.

வெற்றி பெற்ற புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை Mary McGowan/CWPA/Barcroft Images

மெரி மெக்கோவனின் அதிர்ச்சியடையும் அணில் புகைப்படம்தான் ஒட்டுமொத்தமாக வெற்றியாளருக்கான பரிசை தட்டிச்சென்றது. மேலும் மக்களின் விருப்பத் தீர்வாகவும் மற்றும் நிலத்தின் உயிரினங்களுக்கான விருதுகளையும் வென்றது.

படத்தின் காப்புரிமை Shane Keena/CWPA/Barcroft Images

ஒளிந்து ஒளிந்து கண்ணாமுச்சி ஆடும் ஆந்தை புகைப்படத்தை எடுத்தவர் ஷேன் கீனா. கிரியேச்சர் ஆஃப் தி ஏர் எனும் விருதை இப்புகைப்படம் தட்டிச்சென்றது.

படத்தின் காப்புரிமை Tanya Houppermans/CWPA/Barcroft Images

கேமராவை பார்த்தாச்சுல்ல...சிரி!

கடலுக்கடியில் எனும் தலைப்பின் கீழ் 'சிரிக்கும்' நீல திமிங்கிலத்தின் புகைப்படம் விருதை வென்றது. இதை எடுத்தவர் தன்யா ஹூப்பர்மென்.

படத்தின் காப்புரிமை Arshdeep Singh/CWPA/Barcroft Images

இந்தியாவின் கபூர்தலாவில் இந்த புகைப்படத்தை எடுத்தார் அர்ஷ்தீப் சிங். ஆந்தை ஒன்று ஆச்சர்யப்படும் இப்புகைப்படம் ஜுனியர் விருதை வென்றது.

படத்தின் காப்புரிமை Valtteri Mulkahain/CWPA/Barcroft Images

இன்டர்நெட் போர்ட்ஃபோலியோஸ் பிரிவில் பிரவுன் நிற கரடி குடும்பத்தின் புகைப்படம் விருதை வென்றது. இதை எடுத்தார் வால்டேரி முல்காஹைனென்.

அதிகம் பாராட்டைப்பெற்ற புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை Kallol Mukherjee/CWPA/Barcroft Images

இந்தியாவின் கோருமாரா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இப்புகைபபடம் அதிகம் பாராட்டை பெற்றது. மயில்தோகை அணிந்தது போல காண்டாமிருகம் காட்சியளிக்கும் இப்புகைப்படத்தை எடுத்தவர் கலோல் முகர்ஜி.

படத்தின் காப்புரிமை Danielle D'Ermo/CWPA/Barcroft Images

வெறுப்படைந்த இந்த கரடியின் புகைப்படத்தை எடுத்தவர் டேனியல் டெமோ.

படத்தின் காப்புரிமை Roie Galitz/CWPA/Barcroft Images

ஸ்வால்பார்டில் ரோய் கலிட்ஸ் சக போட்டோகிராபரான ஒரு கரடியை தனது மூன்றாவது கண்ணில் கிளிக்கினார்.கீர்ட் வெக்கென் இந்த அணில் புகைப்படத்துக்குச் சொந்தக்காரர்.

படத்தின் காப்புரிமை Geert Weggen/CWPA/Barcroft Images

கீர்ட் வெக்கென் இந்த அணில் புகைப்படத்துக்குச் சொந்தக்காரர்.

படத்தின் காப்புரிமை Sergey Savvi/CWPA/Barcroft Images

இந்த காட்டுப்பல்லிகள் அன்பை வெளிப்படுத்துகின்றனவா அல்லது கட்டிபிடித்துக் கொண்டிருக்கின்றனவா எனச் சொல்வது கொஞ்சம் கடினம்தான். ஆனால் இப்புகைப்படத்தை எடுத்தவர் செர்கே சவ்வி.

படத்தின் காப்புரிமை Sergey Savvi/CWPA/Barcroft Images

தொடுடா பாக்கலாம்!

சினிமாவில் வரும் காட்சி போல இந்த இரண்டு குரங்குகளும் தாய்லாந்தில் உள்ள கீங் க்ரச்சான் தேசிய பூங்காவில் சண்டைபோடும்போது செர்கே செவ்வி தனது கேமராவில் கிளிக் செய்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்