ப்ரியங்கா சோப்ராவின் திருமண முக்காட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா?

ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் படத்தின் காப்புரிமை EPA
Image caption ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் ப்ரியங்கா சோப்ரா தனது திருமண முக்காட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா?

இதன் நீளம் 75 அடி.

ப்ரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனசுக்கும் கடந்த வார இறுதியில் ராஜஸ்தானில் திருமணம் நடந்தது.

அந்த திருமணத்தில் தாம் அணிந்திருந்த ஆடையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ரால்ப் லாரன் நிறுவனம் அந்த ஆடையை வடிவமைத்துள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான முத்துக்கள் வைத்து இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PRIYANKA CHOPRA'S INSTAGRAM

பெருங்காதலுக்குப் பின் கடந்த கோடையில் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இந்த புகைப்படத்தை தங்கள் கருத்துகளுடன் சேர்த்து சமூக ஊடகத்தில் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் இணையவாசிகள்.

இதுவொரு காதல் கதை

26 வயதான ஜோனசும், 36 வயதாகும் ப்ரியங்கா சோப்ராவும் மே 2017ஆம் ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர். அடுத்த ஒரே ஆண்டில் லன்டனில் அவர்களின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா, இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

2016ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் ப்ரியங்காவின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கடந்த ஆண்டின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற்றது.

பின்னர் ஹாலிவுட்டில் நடிக்கச் சென்ற ப்ரியங்கா, க்வான்டிகோ தொடரால் மேலும் பிரபலமடைந்தார். வென்டிலேட்டர், பே வாட்ச் போன்ற ஆங்கிலத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நிக் ஜோனஸ் அமெரிக்காவின் பிரபலமான பாடகராவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்