பேட்ட டிரெய்லர்: "சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேதான பாக்கப் போற"

பேட்ட டிரெய்லர்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ரஜினியை தவிர்த்து பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, சசி குமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த நவாஸுதீன் சித்திகி என பிரம்மாண்ட காஸ்டிங் கொண்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குமுன், யு-டியூபில் வெளியான பேட்ட படத்தின் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஒரு கோடியே இருபது லட்சத்தை தாண்டியுள்ளது.

இச்சூழலில், இன்று வெளியான படத்தின் முன்னோட்டமும் சமூக ஊடகங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

ரஜினியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், அனல் தெறிக்கும் ஒன் லைன் வசனங்கள், ரொமான்டிக் மேனரிஸம், துள்ளல் நடை என படத்தின் முன்னோட்டம் கலர்ஃபுல்லாக இருப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

சமூக ஊடகமான ட்விட்டரில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒருமணி நேரத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிட்டது. ரஜினி பேசிய வசனம் தொடர்பான மீம்களும் ட்விட்டரில் எங்கும் ஆக்கிரமித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: