கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் யாருக்கு சிம்மாசனம்?

கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் யாருக்கு சிம்மாசனம்? படத்தின் காப்புரிமை HBO handout

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ். 2011 ஆம் ஆண்டு முதல், வருடந்தோறும், HBO நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகமாக வெளியிடப்பட்டு வருகிறது.

கடைசி சீசன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் முடிவடைகிறது. இதில் எந்த கதாராப்பாத்திரம் வெற்றிபெற போகிறது என்று கோடிக்கணக்கான ரசிகர்கள், எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய நாவல் தொகுப்பை தழுவி கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் வெளியாகி வருகிறது. ஏழு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சாம்ராஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை.

டினெரிஸ் வெற்றி?

டினெரிஸ் டார்கேரியன் ஏழாவது ராஜ்ஜியத்தின் இரண்டாம் இளவரசி. அவரிடம் ஒரே ஒரு டிராகன் மட்டுமே தற்போது உள்ளது. பிரபல போட்டியாளரான அவரது காதலன் / மருமகனிடம் இழப்பதாக அவள் உணர்ந்த பிறகு, அவள் நேசிக்கப்படாவிட்டால், அதற்குப் பதிலாக பயப்படுவார் என்று முடிவு செய்தார். கிங்ஸ் லாண்டிங்கின் சரணடைதலை புறக்கணித்துவிட்டு, டினெரிஸ் மற்றும் அவரது கடைசி மீதமுள்ள டிராகன், நகரத்தை முற்றுகையிட்டு, தரைமட்டமாக்கி, வருங்காலக் குடிமக்களில் பெரும்பாலானவர்களை தீக்கு இறையாக்கினார்.

.

படத்தின் காப்புரிமை Reuters

சிலர் செர்சி(cersi) மற்றும் அவளுடைய கூட்டாளிகள் வந்துவிட்டால், டினெரிஸ் அனைத்து செயல்பாடுகள் பற்றியும் மற்றவர்கள் கேள்வி கேட்பார்கள். இன்னும், டிராகன் ராணி கடைசி எபிசோட் வரை செல்வதற்கான அனைத்து முகாந்திரங்களையும் வைத்திருக்கிறார்.

அவரது முக்கிய போட்டியாளர் ஜான் ஸ்னோ அவளை ராணியாகக் கருதியுள்ளார். கடைசி எபிசோட் தொடர்பாக ஆன்லைனில் வெளியான தகவலின்படி டினெரிஸ் இறந்து விடுவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஒருவேளை ஜான் ஸ்னோவாக இருக்குமோ?

ஜான் ஸ்னோ மறைந்த டிராகன்ஸ்டோன் இளவரசரான ரேகர் டார்கேரியின் மகன் ஆவார். அவர் விரும்பிய பெண்ணால் தேவையற்ற படுகொலை அரங்கேற்றப்பட்டது. நகரம் தீக்கரையாக்கப்பட்டது. அதற்கு ஜான் ஸ்னோவே சாட்சி. மிகவும் விஸ்வாசம் உள்ளவராக இருப்பார்.

அவரது உண்மையான பெயர் ஏகான் டாரர்கேரியன் என்பதையும், நாம் அறிந்திருக்கிறோம், இரும்பு சிம்மாசனத்தில் சரியான வாரிசாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளவர். ஆனால், அவரது காதலிக்கு எதிராக கத்தியை சூழற்றுவாரா? அல்லது அவரது சேர்ந்து ஆட்சி செய்து கொடிய எண்ணங்களிலிருந்து காதலியை விடுவிப்பாரா? என்பது தெரியாது.

சான்சாவாக இருக்குமா?

சான்சா ஸ்டார்க் விண்டர்ஃபெல் அரசரின் இளைய மகள். ராஜதந்திர திறமைகள், பொறுமை மற்றும் பொது அறிவுடையவள். இந்த தகுதிகள் அனைத்தும் ஒரு திறமையான ஆட்சியாளராக அவரை உருவாக்கும். விண்டர்ஃபெல்லின் இரும்பு மங்கையாக அறியப்பட்டாலும், சிறந்த போட்டியாளராக இருந்தாலும், வம்சத்தின் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு வாய்ப்பு சந்தேகம்தான்.

டிரியன் லான்னிஸ்டரா?

டிரியன் லான்னிஸ்டரின் இளைய மகன். நல்ல அனுபவங்களை பெற்றிருக்கிறார். அவருடைய முந்தைய வேலை, ஒரு நகரத்தின் சாக்கடைகள் மேற்பார்வையிடுவது தான். அனைத்து சீசனிலும் டிரியன் பங்கு மிக பெரியது. உயர் பதவிக்கு அவர் சரியானவரா என்பது தெரியாது. ஆனால், மற்றவர்கள் ஒருவரைக்கொருவர் அடித்து மாய்த்துக் கொண்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

படத்தின் காப்புரிமை AFP

ஆர்யாவா?

ஆர்யா ஸ்டார்க், ஈடன் ஸ்டார்க்கின் மூன்றாவது மகள். சிம்மாசனத்தை அடைவதற்கான அனைத்தையும் அவள் சம்மாத்திருக்கிறாள்.

அதீத சக்திப்படைத்தவரை கொன்று மனித குலத்தை பாதுகாத்திருக்கிறாள்.

ப்ரான்னுக்கு கிடைக்காதா?

ப்ரான் ஏற்கனவே ரிர்டுன்ன்லிருந்து ஹைகார்டன் வரை தனது பயணத்தைத் துவக்கினார். இதிலிருந்தே அவரின் திறமைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். சிம்மாசனத்திற்கு தகுதியானவன் என்பவதை ப்ரான் நிருபித்திருக்கிறான்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரான் ஸ்டார்க்?

ஈடன் ஸ்டார்க்கின் நான்காவது மகன் பிரான் ஸ்டார்க். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் நிறைய சண்டைகளை பார்த்திருக்கிறார்.

வெஸ்டெரோஸைப் பற்றி அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார்: கடந்தகாலம், தற்போது நடப்பது, ஏன் எதிர்காலத்தையும் தெரிந்திருக்கிறார். சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருப்பது போலா அவரே, தமக்குள் பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோரும் சம வாய்ப்புடையவராகவே இருக்கின்றனர். உண்மையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்சில் யாருக்கு வெற்றி என்பது தெரியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்