பிக்பாஸ் 3 லொஸ்லியா: "அப்படியா உன்னை வளர்த்தேன்" - மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன், ஓரமாக நின்ற கவின்

பிக்பாஸ் 3: "அப்படியா உன்னை வளர்த்தேன்" - மனம் குமுறிய லொஸ்லியா தந்தை மரியநேசன் - யார் இவர்? படத்தின் காப்புரிமை Hotstar

பிக்பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன்வந்ததாக காட்சிகள் முன்னோட்டத்தில் இன்று ஒளிப்பரப்பட்டன.

பிக்பாஸ் சீசன் 3 கடந்த 79 தினங்களாகத் தினமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் முகேன் குடும்பத்தினர் நேற்று வந்த வேளையில் இன்று லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்தார்.

பிக்பாஸ் முன்னோட்டத்தில், நா தழும்ப மரியநேசன், " என்ன சொல்லி வந்த நீ...நான் உன்னை அப்படியா வளர்த்தேன்... கதைக்கக் கூடாது..." என்கிறார்.

சேரன் மரியநேசனை சமாதானப்படுத்துகிறார்.

மரியநேசன், "நாங்கள் அப்படி வளர்க்கவில்லை. தலை குனிஞ்சு வாழக்கூடாது.எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வா " என்கிறார்.

லொஸ்லியா அழுகிறார். கவின் ஓரமாக அமைதியாக நிற்கிறார்.

இவ்வாறாக அந்த முன்னோட்டம் இருக்கிறது.

விரிவாக படிக்க: "காசுக்காக மகளை விஜய் டிவிக்கு அனுப்பிவிட்டாயா என்கிறார்கள்” - லொஸ்லியாவிடம் குமுறிய தந்தை

முகேன் குறித்து அறிய:

படத்தின் காப்புரிமை FACEBOOK/MUGEN RAO MGR

ஆயிரக்கணக்கான கமெண்டுகள்

முன்னோட்டம் வெளியான சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இந்த முன்னோட்ட காணொளிக்குப் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.

பெரும்பாலான கமெண்டுகள் கவினை விமர்சித்து உள்ளது.

படத்தின் காப்புரிமை Vijay TV

பலர் சேரனை வாழ்த்தி இருக்கிறார்கள்.

லொஸ்லியாவின் தந்தை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி லொஸ்லியா பிறந்தார்.

கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலையிலுள்ள அழகிய கிராமமான அன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளானாலான வீடொன்றைக் கட்டி அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், ஓட்டுநராகப் பணி செய்து வந்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லொஸ்லியாவின் தந்தை தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றுள்ளார்.

அதன் பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.

லொஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

லொஸ்லியா குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்