தர்ஷன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறாரா, என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்? - நியாயம் கேட்கும் ’புள்ளிங்கோ’

"அன்று கவின், இன்று தர்ஷன்" - என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்? - கிளர்நெழுந்த நெட்டிசன்கள் படத்தின் காப்புரிமை Facebook

தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படக் கூடாது என்று வலியுறுத்தி இதுவரை 40 ஆயிரம் பேர் ட்வீட் செய்துள்ளார்கள்.

"தர்ஷன் 'எங்கள் வீட்டுப் பிள்ளை', எங்கள் மனதில் இடம் பிடித்த அவருக்கு, பிக்பாஸ் வீட்டில் இடமில்லையா? ஐயகோ..." என கிளர்ந்தெழுந்த ட்விட்டர்வாசிகள் அவருக்கு ஆதரவாக இரவு பகல் பாராமல் ட்வீட் செய்து வருகிறார்கள்.

"உண்மைத் தமிழன் என்றால் ஷேர் செய்யுங்கள்" என ஷேர் செய்து வருகிறார்கள்.

என்ன நடந்தது? ஏன் இந்த ட்விட்டர் தாக்குதல்?

அப்படி என்ன நடக்கக் கூடாதது நடந்துவிட்டது? விடுமுறை நாளிலும் தமிழ் ஊடகச் சமூகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? என கேட்கும் மக்களுக்காக இந்த விளக்கம்.

படத்தின் காப்புரிமை Facebook

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தவர் தர்ஷன். வனிதாவை எதிர்த்து முதல் முதலாக கேள்வி கேட்டவரும் அவர்தான். "அநியாயம் எங்க நடந்தாலும் தர்ஷன் வருவன். கேள்வி கேட்பன்" என தங்களுக்கான தலைவன் கிடைத்துவிட்டதாக அப்போது மெய்நிகர் உலகம் கொண்டாடியது. ரசிகர்கள் மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டிலேயே அனைவரும் தர்ஷன்தான் டைட்டில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் ஹாசன் கூறி வருவது போன்று இந்த வாரம் அதிரடி திருப்பமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை Twitter

இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் லொஸ்லியா, ஷெரீன், தர்ஷன், சாண்டி, முகேன் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

முகேன் முன்பே இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்ற நிலையில், ஐம்பது வேண்டாம் ஐந்து போதும் என்று "உனக்கு புரியுதா?" என்று கேட்டு கவின் சில தினங்களுக்கு முன்பு கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

நேற்று சாண்டியும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Hotstar

லொஸ்லியா, ஷெரீன், தர்ஷன் மட்டுமே மிச்சம் உள்ள சூழலில், இன்று யாரேனும் ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம்.

இந்த சூழலில் தர்ஷன் வெளியேற்றப்படுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின.

ஒரு விரல் புரட்சி

இதனை அடுத்து 'தர்ஷன் இல்லையேல்... பிக்பாஸ் இல்லை' என ட்விட்டரில் பதிவிட தொடங்கினார்கள். "போகாதே... போகாதே" என உருகினார்கள்.

இந்த ட்விட்டர் சமூகமே சில நாட்களுக்கு முன், 'கவின் இல்லையேல்... பிக்பாஸ் இல்லை' என டிவீட் கிளர்ச்சி செய்தது குறிப்படத்தக்கது.

"ஏ ஏகாதிபத்தியமே? சாமானியனை வஞ்சிக்காதே...!" என தர்ஷனுக்கு ஆதராவாக ட்வீட் செய்ய தொடங்கினர்.

இந்தியா மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியாவிலேயும் நாங்கதான் மாஸு என்று அங்கிருந்தும் ட்வீட்களை தெறிக்கவிட்டனர்.

தர்ஷன் எல்லாம் ஸ்ட்ராங்க் கண்டஸ்டண்ட் மற்றவர்களை காப்பாற்றுவோம் என்று இருந்தவர்கள் இதன் பின் விழித்துக் கொண்டனர்.

"இணையமே... ட்வீட்டுடன் நிற்காதீர்கள்... தர்ஷனுக்கு ஆதரவாக ஒரு விரல் புரட்சி செய்யுங்கள் வாக்களியுங்கள்" என்று தர்ஷன் படை களமாடியதில் தர்ஷனுக்கு ஆதரவாக வாக்குகள் குவிந்தன.

படத்தின் காப்புரிமை Twitter

அதே சமயம் தர்ஷனுக்கு எதிரான மனநிலையும் இல்லாமல் இல்லை. விளையாட்டு... விளையாட்டு எனப் போட்டியில் குறியாக இருந்தாரே தவிர சக மனிதர்களின் உணர்வுகளை அவர் மதிக்கவே இல்லை என்று கவலைப்பட்டு இருக்கிறார்கள் சிலர்.

லொஸ்லியா குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :