திருத்தங்களே இல்லாமல் மணமக்கள் கோலம் வரையும் புதுச்சேரி பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோலக் கலையின் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி? இல்லத்தரசி மாலதியின் கதை உங்களுக்கு தீர்வாக இருக்கலாம்

வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த கலையின் மூலம் பல ஆயிரங்களை சம்பாதித்து வருகிறார்.

வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் குறைந்துவரும் நிலையில், புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த கலையின் மூலம் பல ஆயிரங்களை சம்பாதித்து வருகிறார்.

மாலதி தனது சிறு வயதிலிருந்தே கோலங்களை வரைந்து வருகிறார்.

இதுவரை தனது வாழ்நாளில் பல நூற்றுக்கணக்கான கோலங்களை வரைந்திருப்பதாக உறுதியாக கூறுகிறார்.

தான் ஏழாவது படிக்கும்போது, கோலங்களை ஓவியமாக வரைய முயற்சித்ததாக கூறும் மாலதி, அவ்வாறு முயற்சித்த போது அதில் தான் வெற்றி பெற்றதாகவும் கூறுகிறார்.

திருமணங்களில் மணமக்களின் புகைப்படத்தை அப்படியே கோலம் மூலம் வரைவதுதான் மாலதியின் தனித்திறமை.

மாலதியின் கோலப் பட்டியல் 1 சதுர அடியில் இருந்து தொடங்கி 2,000 சதுர அடி வரை நீள்கிறது.

தண்ணீருக்கு அடியில், தண்ணீரின் மீது என வித்தியாசமாக கோலம் போட்டு அசத்தும் மாலதி, அந்த கலைக்காகவே புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருதையும் பெற்றுள்ளார்.

இந்த கோலக் கலையை தமிழ்ச் சமூகம் மறந்து வருவதாகவும், இந்த கலையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் பொறுப்பு தமிழ்ப் பெண்களுக்கு இருப்பதாகவும் என்று திடமாக கூறுகிறார் மாலதி.

காணொளி தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :