தர்பார் படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த ரஜினி ரசிகர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஜினியை சந்தித்த தருணம் எப்படியிருந்தது? - தர்பார் பார்க்க ஜப்பானில் இருந்து வந்த ரசிகர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட்சுகியுடன் சென்னை வந்திருந்தார்.அவருடனான கலந்துரையாடலிலிருந்து,

கே : முதல் காட்சி பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து சென்னை வந்திருக்கிறீர்கள். என்ன காரணம் ?

ப : எனக்கு ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும், ஆக்‌ஷன் பிடிக்கும், எளிமை பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் அவருடைய டயலாக் ரொம்ப பிடிக்கும். அவருடைய தர்பார் ஸ்டைலை பார்ப்பதற்காக சென்னை வந்தேன். திரையில் அவரை ரசித்தேன். தர்பார் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கே : நீங்கள் சென்னை வந்து பார்த்த முதல் திரைப்படம் எது ? தற்போது எத்தனையாவது முறையாக சென்னை வந்துள்ளீர்கள்?

ப : முதன்முறையாக பாபா படம் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தேன். இதுவரை பத்துமுறை சென்னை வந்திருக்கிறேன்.

கே : ஜப்பானில் முதல் நாள் முதல் காட்சிக்கும், சென்னையில் முதல் நாள் முதல் காட்சிக்கும் என்ன வித்தியாசம் ?

ப : பெரும்பாலும் ஜப்பான் மக்களுக்கு தமிழ் தெரியாது. சப் டைட்டிலுடன் படம் பார்ப்பார்கள். தாமதமாகத் தான் ஜப்பானில் வெளியாகும். அதுவரை என்னால் காத்திருக்க முடியாது.

கே : ஜப்பானிலிருந்து சென்னை வரும்போது உங்களுடைய நண்பர்கள் என்ன சொல்லி அனுப்பி வைத்தார்கள் ?

ப : என்னுடைய ஜப்பான் நண்பர்கள் தர்பார் படம் பார்க்க வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். ரஜினியைப் பார்க்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஒருநாள் ரஜினி சார் ஜப்பானுக்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை

கே : நீங்க ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் வைத்துள்ளீர்கள். அதனைப் பற்றி சொல்லுங்கள் ?

ப : ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நான் ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். அப்பொழுது 100 பேர் ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள். தற்போது பெண்கள், குழந்தைகள் உட்பட 500 பேர் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

கே : உங்களுக்கு பிடித்த ரஜினியின் திரைப்பட வசனம் எது ?

ப : எனக்கு பாட்ஷா படத்தில் வருகிற, 'பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்கிற வசனம் ரொம்ப பிடிக்கும்.

கே : தர்பார் படப் பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் ?

ப : தர்பார் படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை திரையரங்கை அதிரச் செய்கிறது. சும்மா கிழி பாடல் எனக்கு பிடித்த பாடல்.

கே : ஏன் இந்த அளவிற்கு ரஜினியை விரும்புகிறீர்கள் ?

ப : அவர் ரொம்ப நல்ல மனிதர். அவருடைய திரைப்படம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால், தமிழ் கலாச்சாரம் பிடிக்கும். தமிழ் மக்களும், தமிழ் உணவும் எனக்கு பிடிக்கும். அதற்கான எல்லா காரணமும் தலைவர் மட்டும் தான்.

கே : ரஜினி அரசியலுக்கு வரணும் என்பது தான் பொதுவாக ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன ?

ப : தமிழ்நாடு அரசியல் எனக்கு தெரியாது. ஆனால், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் தலைவர் தான்.

கே : தற்போது ஜப்பானில் ரஜினி திரைப்படம் வெளியாகி இருக்கிறதா ?

ப : தர்பார் திரைப்படம் ஜப்பானில் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், காலா மற்றும் பேட்ட திரைப்படம் ஜப்பானில் மூன்று மாதங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கே : நீங்கள் ரஜினியை சந்தித்த தருணம் எப்படியிருந்தது ?

ப : என்னை பார்த்ததும் கை குலுக்கி வரவேற்றார். நான் பேசியதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.

காணொளி தயாரிப்பு: வித்யா காயத்ரி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :