ஜல்லிக்கட்டு: பாலமேட்டில் சீறிப்பாயும் 700 காளைகளும், 923 வீரர்களும் (புகைப்பட தொகுப்பு)

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 923 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

வாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை பரிசோதனை செய்யவும் அடிபடும் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.

காளைகளுக்கு மது, போதைப்பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும், காய்ச்சல் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்து களத்தில் விளையாடும் மாட்டிற்கும் கார் முதல் சைக்கிள் வரை பரிசுகளை வழங்குகின்றனர்.

படங்கள் மு.நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்