Maanadu: ட்விட்டரில் ட்ரெண்டாகும் சிலம்பரசனின் மாநாடு- யார் இந்த அப்துல் காலிக்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் சிலம்பரசனின் மாநாடு- யார் இந்த அப்துல் காலிக்

பட மூலாதாரம், V House Productions

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ள மாநாடு திரைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. Manaadu என்ற ஹாஷ்டேகின் கீழ் ஏறத்தாழ 17 ஆயிரம் ட்வீட் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், Twitter trends

நேற்று சிலம்பரசன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை அடுத்தே மாநாடு ட்ரெண்டாகி உள்ளது.

பட மூலாதாரம், V House Productions

படத்திலிருந்து சிலம்பரசன் விலகிவிட்டார், வேறு நாயகந்தான் நடிக்கிறார், தயாரிப்பாளருக்கும் சிலம்பரசனுக்கும் மன வருத்தம், மகாமாநாடு என்ற பெயரில் சிலம்பரசனே நடித்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என பரவலாக முணுமுணுக்கப்பட்ட சூழலில் மாநாடு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

"தைரியத்தைவிட பெரிய அச்சுறுத்தல் எதிரிக்கு எதுவும் இல்லை" - அப்துல் காலிக் என்ற வாசகம் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

அப்துல் காலிக்காக சிலம்பரசன் நடிக்கிறார்.

சரி யார் இந்த அப்துல் காலிக்?

11ஆம் நூற்றாண்டில் அப்துல் காலில் என்ற பெயரில் சூஃபி தத்துவவியல் அறிஞர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.

18ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த ஓர் அரசியல்வாதியின் பெயர் அப்துல்காலிக்.

இவற்றையெல்லாம் கடந்து இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இஸ்லாத்திற்காக அப்துல் காலித் என பெயர்சூட்டிக் கொண்டார்.

யுவன்சங்கர் ராஜாதான் இந்த திரைப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

சமூக ஊடகங்களில் கொண்டாட்டம்

சிலம்பரசனுக்கு கடந்த ஆண்டு வந்தா ராஜாவாகதான் வருவேன் திரைப்படம் மட்டுமே வெளியானது. இதனை சுந்தர். சி இயக்கி இருந்தார். இது தெலுங்கில் பவன் கல்யாண், சம்ந்தா நடித்த அத்திரண்டிகி தாரேதி திரைப்படத்தின் தமிழாக்கம்.

ஒரு வருட இடைவெளிக்கு பின் சிலம்பரசன் நடிப்பதால் மாநாடு குறித்து பல பதிவுகளை ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர் அவர் ரசிகர்கள். .

பட மூலாதாரம், Facebook/ yuvakrishna

வெங்கட்பிரபு இயக்கும் 9வது படம் இது. அவர் இயக்கிய பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: