ஹாலிவுட்டில் பாலுறவு காட்சிகள்: படமாக்க இந்தப் பெண் எப்படி உதவுகிறார் தெரியுமா?

  • வேலரி பெரசோ
  • பிபிசி
ஹாலிவுட்டில் பாலுறவு காட்சிகள் எப்படி படமாக்கப்படுகிறது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க்கில் படப்பிடிப்பு தளத்தில் அலிசியா ரோடிஸ் ஒரு குறிக்கோளுடன் நுழைகிறார்: அமெரிக்காவில் முக்கியமான ஒரு நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடருக்காக, குழுவாக பாலியல் உறவில் ஈடுபடும் - மிகவும் சிக்கலான - மற்றும் துணிச்சலான - காட்சிகளின் படப்பிடிப்பை மேற்பார்வை செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். அதில் பங்கேற்கும் 30 நடிகர்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட அந்தரங்க எல்லைகளை படத்தின் இயக்குநர் பின்பற்றுகிறாரா என்பதை உறுதி செய்வது அலிசியாவின் பணி. ஒவ்வொருவரும் ஒப்புதல் அளித்த போது குறிப்பிட்டுக் கொடுத்த நிபந்தனைகளை ஒரு எக்ஸெல் பைலாக அவர் வைத்திருக்கிறார். படப்பிடிப்பு நடைபெறும் போது, இந்த நிபந்தனைகள் எல்லாம் மீறப்படாமல் இருக்கின்றனவா என்பதை அவர் உறுதி செய்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

நகரில் வேறொரு இடத்தில் படப்பிடிப்பு தளத்தில் செல்சியா பேஸ் என்பவர், ஒரு ஆணும், பெண்ணும் பங்கேற்கும் படுக்கையறைக் காட்சிகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இரண்டு நடிகர்கள் சில காட்சிகளை மறுபடி நடிக்கும்போது, தரப்படும் அறிவுறுத்தல்களைப் பாலுறவு ரீதியில் அல்லாத வார்த்தைகளால் சொல்வதற்கு, ``இங்கே நீங்கள் `தடவக் கூடாது,' உங்களுடைய ஜோடியின் உடலில் முன்புறத்தில் நீங்கள் சதை அளவில் தொடுகிறீர்கள்'' என்று அவர் கூறுகிறார்.

அந்தரங்க காட்சிகள் ஒருங்கிணைப்பாளர்களின் உலகத்துக்கு வாருங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்தப் பெண்கள் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்திருக்க மாட்டார்கள். இப்போது பொழுதுபோக்கு தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றில் அவர்கள் ஓர் அங்கமாகிவிட்டார்கள்.

பட மூலாதாரம், Dahlia Katz

படக்குறிப்பு,

படப்பிடிப்பில் காட்சியை திட்டமிடும் அலிஸா ரோடிஸ்

பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் என்ற வகையில், கட்டிப் பிடித்தல்கள், முத்தங்கள் தருதல் முதல் நிர்வாணம் அல்லது பாலுறவு போன்ற சித்தரிக்கப்பட்ட உடலைத் தொடுவது தொடர்பான உணர்வுப்பூர்வமான காட்சிகள் படம் பிடிப்பதில் நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உதவிகரமாக இருக்கிறார்கள்.

இதுபோல பணியமர்த்தப்பட்ட அந்தரங்க கவனிப்பு நிபுணர்களைக் கொண்டு, பாலியல் காட்சிகள் படப்பிடிப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு SAG-AFTRA என்ற அமெரிக்காவின் பெரிய நடிகர்கள் சங்கம், முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிக்கையை வெளியிட்டது. பொழுதுபோக்கு தொழில் துறையில் பாலியல் அத்துமீறல்கள் நடக்காமல் தடுப்பதன் ஒரு முயற்சியாக இது அமைந்துள்ளது.

``தங்களுடைய பாதுகாப்பு குறித்து எங்கள் உறுப்பினர்கள் கவலை தெரிவித்த சூழ்நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது'' என்று சங்கத்தின் தலைவர் கேபிரியல் கார்ட்டெரிஸ் கூறியுள்ளார். ``நடிகர்கள், குறிப்பாக நடிகையர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைக் கூறியுள்ளனர். வெயின்ஸ்டெயின் பற்றி மட்டுமல்ல, வேறு பலரும் கூறியுள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், HBO

படக்குறிப்பு,

டியூஸ் படப்பிடிப்பில் மேகி மற்றும் டாமினிக்

திரைப்படத் துறையின் முன்னாள் ஜாம்பவான், 67 வயதான ஹார்வே வெயின்ஸ்டெயின், பாலியல் அத்துமீறல் குறித்த 2 வழக்குகளில் குற்றவாளி என்று நியூயார்க் நீதிமன்ற விசாரணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான புகார்களைத் தொடர்ந்து #MeToo மற்றும் Time's Up இயக்கங்கள் தீவிரமடைந்தன. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் அந்தரங்க காட்சிகள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டெயின்

``நாங்கள் சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பவர்கள். சண்டைக் காட்சிகளைத் திட்டமிட்டுக் கொடுக்கிறோம். உடல் ரீதியாக வன்முறை காட்சிகள் வரும்போது அதில் பங்கேற்பவர்களின் நலன்களில் அக்கறை காட்டுகிறோம்'' என்று அலிசியா ரோடிஸ் கூறுகிறார். இவர் முதலில் சண்டைப் பயிற்சியாளராகத்தான் பயிற்சி பெற்றார்.

``ஆனால் அந்தரங்கம் மற்றும் நிர்வாணக் காட்சிகள் என்று வரும்போது, மற்றொரு அதிக ஆபத்தான சூழ்நிலையாக அது இருந்தாலும், அதுபற்றி பரிசீலிக்கப்படுவதே இல்லை. அது அதிர்ச்சி தருவதாக உள்ளது.''

ரோடிஸ் இப்போது முழு நேர அந்தரங்கக் காட்சி ஒருங்கிணைப்பாளராகிவிட்டார். அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு இயக்குநர்கள் சர்வதேச அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார். இப்போது சுமார் 50 அந்தரங்க காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் திரைத் துறையில் பணியாற்றி வருவதாக, முக்கியமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளில் இது பத்து மடங்கு அதிகரித்து விட்டதாக துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நியூயார்க்கில் படப்பிடிப்பு தளத்தில் அலிசியா ரோடிஸ் ஒரு குறிக்கோளுடன் நுழைகிறார்: அமெரிக்காவில் முக்கியமான ஒரு நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடருக்காக, குழுவாக பாலியல் உறவில் ஈடுபடும் - மிகவும் சிக்கலான - மற்றும் துணிச்சலான - காட்சிகளின் படப்பிடிப்பை மேற்பார்வை செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். அதில் பங்கேற்கும் 30 நடிகர்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட அந்தரங்க எல்லைகளைப் படத்தின் இயக்குநர் பின்பற்றுகிறாரா என்பதை உறுதி செய்வது அலிசியாவின் பணி. ஒவ்வொருவரும் ஒப்புதல் அளித்த போது குறிப்பிட்டுக் கொடுத்த நிபந்தனைகளை ஒரு எக்ஸெல் பைலாக அவர் வைத்திருக்கிறார். படப்பிடிப்பு நடைபெறும் போது, இந்த நிபந்தனைகள் எல்லாம் மீறப்படாமல் இருக்கின்றனவா என்பதை அவர் உறுதி செய்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஸ்லீப்பிங் வித் அதர் பீபுள் படப்பிடிப்பு தளத்தின் முத்தக்காட்சி

சமத்துவமற்ற பலம்

இயக்குநர்கள் அறிவுறுத்தல் அளித்த பிறகு அந்தரங்கக் காட்சிகளை சிறப்பானதாக ஆக்கிக் கொள்வது வழக்கமாக இருந்தது, நடிகர்கள் தாங்களாகவே எல்லைகளை வகுத்துக் கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.

``நடிகர்களின் உண்மையான அனுபவங்களை நாங்கள் சார்ந்திருந்தோம். ``ஆர்வத்துடன் செய்து முடிப்பது'' என்ற நடிகர்களின் எண்ணங்கள் இயக்குநர்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்து வந்தது'' என்று பேஸ் கூறுகிறார். அவர் நடிகராக இருப்பதுடன் படப்பிடிப்பு தள அந்தரங்க காட்சி கல்வி என்ற ஆராய்ச்சிக் குழுவை 2017ல் உருவாக்கியவராகவும் இருக்கிறார்.

பட மூலாதாரம், HBO

படக்குறிப்பு,

சமீபத்தில் எமிலியா கிளார்க், Game of Thrones -க்காக சில அப்பட்டமான காட்சிகளை படம் பிடித்தது பற்றிக் கூறியுள்ளார்

இந்தத் துறையில் அதிகாரம் செலுத்துபவர்கள் விஷயத்தில், நடிகர்களுக்கு - குறிப்பாக நடிகைகளுக்கு - தங்களுடைய மகிழ்ச்சியின்மை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

``தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு, எதைக் கேட்டாலும் `சரி' என்று சொல்ல வேண்டும் என்பது தான் முதல் விதியாக இருக்கிறது. நடிகர்களுக்கான பயிற்சியின் போது அவ்வாறான கருத்து திணிக்கப்படுகிறது'' என்கிறார் பேஸ்.

2017 அக்டோபரில் வெயின்ஸ்டெயின் விவகாரம் வெடிப்பதற்கு முன்பிருந்தே இந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. பெர்னார்டோ பெர்டோலுசியின் Last Tango 1972ல் பாரிசில் படமாக்கப்பட்ட தசாப்தங்கள் கடந்த நிலையில், தாம் ``அத்துமீறலுக்கு ஆளானதானதாக'' உணர்வதாக மரியா ஸ்னெய்டர் கூறியுள்ளார். திரைக்கதையில் இல்லாத விஷயமாக டைரக்டர் தன்னிடம் எதிர்பாராத பாலியல் தொடர்பு கொண்டதில் ``சிறிது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக'' உணர்ந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். அப்போது அவருக்கு 19 வயது.

சமீபத்தில் எமிலியா கிளார்க், Game of Thrones -க்காக சில அப்பட்டமான காட்சிகளைப் படம் பிடித்தது பற்றிக் கூறியுள்ளார். அவை ``பயங்கரமானவையாக'' இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

``இப்போது ஒரு படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் அனைவருடனும் முழு நிர்வாணமாக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது. என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்கு என்ன வேண்டும், எனக்கு என்ன வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது'' என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Fox Photos / Getty Images

படக்குறிப்பு,

1926ல் எடுக்கப்பட்ட முத்தக் காட்சி

ஆனால் #MeToo - இயக்கத்துக்குப் பிறகு ஹாலிவுட்டில் விஷயங்கள் மாறத் தொடங்கியுள்ளன.

HBO-வின் The Deuce தொடருக்கான படப்பிடிப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. நியூயார்க்கில் 1970களில் அபார வளர்ச்சி பெற்ற ஆபாச வீடியோ பற்றிய தொடராக அது இருந்தது. பாலியல் தொழிலாளியாகவும், ஆபாச காட்சிகளில் நடிக்கும் நட்சத்திரமாகவும் தோன்றிய எமிலி மியாடே, சில நிர்வாணக் காட்சிகள் மிகவும் அசௌகரியமாக இருப்பதாக உணர்ந்த போது, மேலிட நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார்.

``வாழ்க்கை முழுக்க பாலியல் மயமாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் நானும் உண்டு. முதலாவது பாலியல் காட்சியில் நடித்த போது என் வயது 16. பல நேரங்களில் நான் அசௌகரியமாக உணர்ந்திருக்கிறேன். அந்தத் தருணத்தில் உணர்ந்திருப்பேன் அல்லது நடந்தவற்றை நினைத்துப் பார்த்த போது உணர்ந்திருப்பேன்'' என்று HBO நேர்காணலில் மியாடே கூறியுள்ளார்.

பாலியல் உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளை ஒருங்கிணைக்க முக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தால் அலிசியா ரோடிஸ் நியமிக்கப்பட்ட போது, முதன்முறையாக மாற்றம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Paul Schiraldi / HBO

படக்குறிப்பு,

இயக்குனர் சுசானாவுடன் அலிஸா ரோடிஸ்

``நான் எப்போதும், ``எழுத்துபூர்வமாக என்ன உள்ளது, அதில் இல்லாதவை எவை' என்பது பற்றி பேசுவேன். அதன் மூலம் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத எதுவும் நடந்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள முடியும்'' என்று அவர் விவரித்தார்.

``டைரக்டரின் எண்ணத்தை மேம்படுத்த நான் விரும்புகிறேன். அதே சமயத்தில் நடிகர்களின் வரம்புகளுக்கு உள்பட்டு நாம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.''

நிர்வாண நிலை காட்சிகள் இடம் பெறும் எந்தக் காட்சியாக இருந்தாலும், அந்தரங்க படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்களை பணிக்கு அமர்த்தப் போவதாக பின்னர் எச்.பி.ஓ. நிறுவனம் அறிவித்தது. அதன் பிறகு நெட்பிலிக்க், அமேசான், ஆப்பிள் பிளஸ் போன்ற நிறுவனங்களும் அதன்படியே அறிவித்தன.

பட மூலாதாரம், Getty / SOPA Images

படக்குறிப்பு,

யாரிட் டோர்

பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படப்பிடிப்பு தளங்களிலும் அந்தரங்கக் காட்சி ஒருங்கிணைப்பாளர்களைக் காண முடிகிறது.

``நீங்கள் ஆதரவு அமைப்பின் அங்கமாக இருக்கிறீர்கள். ஆனால் கிரியேட்டிவ் நடைமுறையின் அங்கமாகவும் இருக்க வேண்டும். கதைக்கு அந்தரங்கக் காட்சி எப்படி பொருத்தமாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்'' என்று யாரிட் டோர் கூறுகிறார். லண்டனில் வெஸ்ட் என்ட்-ல் முதலாவது அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர்.

``தியேட்டரில், நான்கு வார கால நடைமுறையாக அது இருக்கும். தொலைக்காட்சி மற்றும் பிலிமில் அது குறுகிய கால அவகாசமாக இருக்கும். எனவே, படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன்னதாக நடிகருடன் நீங்கள் நெருக்கமாக விவாதித்திருக்க வேண்டும்'' என்று டோர் ஒப்பீடு செய்தார்.

பட மூலாதாரம், Molly Prunty

படக்குறிப்பு,

தி அன்னி ஃப்ரான்க் படப்பிடிப்பில் பேஸ்( இடது பக்கம்)

புதிய மொழி

Showtime-ன் அதிக அளவில் பாலியல் உணர்வைத் தூண்டும் The Affair நிகழ்ச்சியில், பணியாற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர் அமன்டா புளூமெந்தால், ``சமரசம் செய்பவர், ஆலோசகர் காட்சி அமைப்பாளர் என்ற பொறுப்புகள் நிறைந்ததாக'' இந்தப் பணி உள்ளது என்று கூறுகிறார்.

கடந்த ஆண்டில், அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், தங்கள் பணிக்கான புதிய நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கியுள்ளனர். திரைக்கதையை ஆய்வு செய்வதில் இருந்து எழுத்தாளர்களுக்கு யோசனைகள் கூறுவது, சித்தரிக்கப்பட்ட பாலுறவுக் காட்சிகளை எப்படி படம் பிடிக்க வேண்டும் என்பது பற்றிய தொழில்நுட்ப விஷயங்கள் வரை இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

SAG-AFTRA-வின் புதிய வழிகாட்டுதல்கள், தயாரிப்புக்கு முந்தைய அம்சங்கள் பற்றி கூறுகிறது. முன்னோட்டத்துக்கு முன்னதாக நடிகரை இந்த ஒருங்கிணைப்பாளர்கள் நேருக்கு நேராக சந்திப்பது, உரிய நிர்வாண நிலை ஆடைகளை ஆடை வடிவமைப்புத் துறையினர் வழங்குவதை உறுதி செய்தல், மர்ம உறுப்புகளை மறைப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் செயற்கை உறுப்புகள், சிலிக்கான் பொருட்கள் அல்லது கடினமான பொருட்கள் வழங்குதலை உறுதி செய்வது பற்றி வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

அந்தரங்கக் காட்சியைப் படமாக்கும்போது, படப்பிடிப்பு தளம் மூடப்பட்டிருப்பதையும், படப்பிடிப்பு அலுவலர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக இருப்பதையும் ஒருங்கிணைப்பாளர் உறுதி செய்திட வேண்டும். காட்சியமைப்பு மற்றும் காட்சியில் நேரடி தலையீடு செய்பவராகவும் அவர் இருப்பார்.

``அந்தக் காட்சி படமாக்கப்படும் நேரம் முழுக்க, தொடர்ச்சியாக ஒப்புதல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் பணியின் முக்கியமான அம்சம்'' என்று புளூமெந்தால் கூறுகிறார்.

பட மூலாதாரம், AMANDA BLUMENTHAL

படக்குறிப்பு,

படப்பிடிப்பில் அமந்தா ப்ளூமெந்தல்

பிரிட்டனில், அந்தரங்கக் காட்சிகள் படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்களின் பங்களிப்பு அம்சங்களை பிரிட்டன் டைரக்டர்கள் அமைப்பு உருவாக்கியுள்ளது. பிபிசியின் முதலாவது அந்தரங்க காட்சி டைரக்டர் மற்றும் நெட்பிலிக்ஸின் பாலியல் கல்வி ஆலோசகர் இட்டா ஓ'பிரியன் இந்த வழிகாட்டுதல்களை மேம்படுத்தி வருகிறார். எல்லைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று ஓ'பிரியன் கூறுகிறார். ``தேவைப்படும் இடத்தில் படப்பிடிப்பை நிறுத்துவதற்கான சம்மத அணுகுமுறையை சேர்ப்பதும் அவசியம்'' என்கிறார்.

ஒரு காரை விரட்டிச் செல்தல் அல்லது மற்ற சண்டைக் காட்சிகளைப் போல, இதற்கும் முன்கூட்டியே நிறைய திட்டமிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

``ஒரு முத்தக்காட்சி வருகிறது என்றால், ஆழமான முத்தமாக இருக்குமானால், மார்பகத்தைத் தொடுவது பரவாயில்லையா ? முதுகு, தோள்பட்டைகள், அடிப்பகுதிகளைத் தொடுவது பரவாயில்லையா? மர்ம உறுப்புகளை தொடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். காட்சிக்கு அவசியம் என்ற நிலையில், அவ்வாறு தொடுவதற்கு நடிகர்கள் ஒப்புக் கொண்டால் அதற்கு ஒரு வரம்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று ரோடிஸ் விளக்குகிறார். முன்பு நடிகர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஆடை வடிவமைப்பு மற்றும் மேக்கப் கலைஞர்களுடையதாக இருந்தது. காட்சிகளின் இடையில் அவர்கள் அங்கிகளை கொடுத்து, ஒப்புக்கொண்டதைவிட அதிகமான அளவுக்கு உடலின் பாகங்கள் கேமராவில் பதிவாகவில்லை என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Andy Difee

படக்குறிப்பு,

அலிஸா ரோடிஸ் காட்சியை விளக்குவது

இப்போது படப்பிடிப்பு தளத்தில், அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் - படப்பிடிப்பு டைரக்டர்களின் வார்த்தைகளை, பாலியல் ரீதியில் அல்லாத வார்த்தைகள் மூலம் சொல்வதற்கான வார்த்தைகளை உருவாக்கியுள்ளனர்.

``ஒரு நடிகரை இன்னொரு நடிகர் தொடுவது பற்றியதல்ல இது: ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரத்தைத் தொடுவது பற்றியது, ஆனால் நடிகர்கள் சதை அளவில் தொட்டுக் கொள்கிறார்கள்'' என்று பேஸ் விவரித்தார்.

``ஜோடியாளருக்கு வருடிக் கொடுப்பதற்கு'' அப்பாற்பட்டு, ``ஜோடியாளரின் முகத்தில் பக்கவாட்டில் தோலை தொடுமாறு'' நடிகரிடம் தாம் கூறுவதாக பேஸ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Forever Tonight / Swetha Regunathan

படக்குறிப்பு,

ஃபாரெவர் நைட் படத்தின் புகைப்படம்

அமைப்பு முறையில் மாற்றம்

இருந்தாலும், அந்தரங்கக் காட்சி படப்படிப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு, திரைப்படத் துறையில் சிறிது எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

முதலில், இவர்களால் படப்பிடிப்பு தாமதமாகும் என்று SAG-யின் அங்கத்தினர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கருதினர்.

நிதி பிரச்சினையும் உள்ளது. ஒரு நிபுணரை பணிக்கு அமர்த்துவது என்பது சிறிய தயாரிப்பாளர்களுக்கு, திட்டமிட்ட நிதி செலவை அதிகரிப்பதாக இருக்கும். ``நாம் பாலியல் கண்காணிப்பு போலீஸ் அல்ல. சில நேரங்கள் தாங்கள் நிர்வாண காட்சிகளை விரும்பும் நிலையில், அதற்கு ``முடியாது'' என மறுப்பு சொல்ல நாங்கள் இருக்கிறோம் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்கள்'' என்று பேஸ் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Ari Shapiro

படக்குறிப்பு,

ஹெவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

``அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தும்போது, தங்களுடைய பாரத்தில் ஒரு பகுதியை இன்னொருவர் பகிர்ந்து கொள்வதாகவும், அது பாதுகாப்பானதாக இருப்பதாகவும் டைரக்டர்கள் உணர்கிறார்கள்'' என்று யாரிட் டோர் கூறுகிறார்.

இருந்தபோதிலும், இந்தத் துறையில் அடிப்படையில் அதிக மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது - ``ஒப்புதல் கலாச்சாரத்தை'' நடிகர்கள் குறிப்பாக நடிகைகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையை அசைத்துப் பார்ப்பதாக இருக்க வேண்டும்.

``படப்பிடிப்பு தளத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாக இது உள்ளது. நடிகர்கள் தங்கள் விருப்பத்தைத் வெளிப்படுத்த, தங்களுடைய தேவையை வெளிப்படுத்த தெரிந்த நடிகர்களாக இருப்பதை விரும்பும் டைரக்டர்கள் நமக்குத் தேவை” என்கிறார் பேஸ்

பட மூலாதாரம், Marlayna Demond

படக்குறிப்பு,

ஷி லைக் கேர்ள்ஸ் படப்பிடிப்பு புகைப்படம்

கடந்த ஆண்டு அந்தரங்கக் காட்சி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சர்வதேச அமைப்புக்கு, சான்றிதழ் படிப்புக்கு, 10 இடங்களில் இருந்து 70 விண்ணப்பங்கள் வந்திருந்தன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

``இப்போதைக்கு அந்தரங்கக் காட்சிகள் படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் போதிய அளவுக்கு இல்லை. இதற்கான தேவை அதிகரிக்கும்'' என்று கார்ட்டெரிஸ் கூறுகிறார்.

ஒருங்கிணைப்பாளர்கள் பல பகுதிகளிலும் கிடைக்கும் நிலை இருக்க வேண்டும் என்று நடிகர்கள் கூறுகின்றனர்.

``இப்போது பெரும்பாலும் பெண் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். இரு தரப்பிலும் ஒருங்கிணைப்பாளர்கள் தேவை, வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் தேவை'' என்று ரோடிஸ் கூறுகிறார்.

``சில நேரங்களில் வெள்ளையராக உள்ள ஒருங்கிணைப்பாளர் மட்டும் இருந்தால் போதாது. மற்றவர்களுக்கு பாதுகாப்பான விதிமுறைகள் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் போகலாம். இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்'' என்கிறார் அவர்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST