'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடிய பழங்குடியின பெண் நஞ்சம்மாவின் பயணம்

'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடிய பழங்குடியின பெண் நஞ்சம்மாவின் பயணம்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் வசிக்கும் பழங்குடியினப் பெண் நஞ்சம்மாவின் பாடல் சமூகவலைதளங்களில் பிரபலமடந்துள்ளது.

பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் நஞ்சம்மா பாடிய இருளர் மொழிப்பாடல் ஹிட் ஆகியுள்ளது.

அதே படத்தில் இவர் பாடியுள்ள 'தெய்வமகளே' என்னும் பாடலுக்கு இவரே பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்தும் உள்ளார்.

13 வயது முதல் பழங்குடியினர் இசைக்குழுவோடு இணைந்து பாடிவருகிறார் நஞ்சம்மா.

தனித்துவமான குரல் வளத்தால் பிரபலமடைந்துள்ள நஞ்சம்மா, பழங்குடியின குழந்தைகளுக்கு இசை கற்பித்து வருகிறார்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு: கு.மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: