பிக் பாஸ் தமிழ் சீசன் 4 - அக்டோபர் 4 முதல் ஆரம்பம்

பிக்பாஸ்

பட மூலாதாரம், Bharani Dharan

பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற மூன்று சீசன்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இது தொடர்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் காணொளி இடம்பெற்ற விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக மூன்று சீசன்கள் நிறைவடைந்திருந்த நிலையில், நான்காவது சீசன் ஒளிபரப்பாவது தள்ளிப்போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 4இல் இடம்பெறுவோரின் விவரம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தேர்வாக, கடாரம் கொண்டான் படத்தில் நடித்த தனது மகள் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்த அபிஹசன் பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அந்த தேர்வில் தான் இல்லை என்று அபி ஹஸ்ஸன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகும் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பாக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி

முதன் முதலில் நெதர்லாந்தில் பிக் பிரதர் என்ற பெயரில் 1999 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பிக் பிரதர் எல்லோரையும் கண்காணிப்பதுபோல, வீட்டில் இருப்பவர்கள் பல கேமராக்களால் கண்காணிக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் தே மால் ஜூனியர் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தார். இந்த நிகழ்ச்சியின் சர்வதேச உரிமம் நெதர்லாந்தின் என்டேமால் ஷைன் குழுமத்திடம் இருக்கிறது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் பிரபலம்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது.

தமிழில் 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' ஒளிப்பரப்பானது. கமல் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் 1 சீசனில் சிநேகன், ஓவியா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா வரூணி, வையாபுரி, காஜல் பசுபதி, ரைஷா வில்சன், காயத்ரி ரகுராம், உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த ஓவியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் பக்கங்கள் எல்லாம் தொடங்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :