பிக் பாஸ் சீசன் 4: சுரேஷ் சக்ரவர்த்தி-அனிதா சம்பத் இடையே முதல் சண்டை

பிக்பாஸ்

பட மூலாதாரம், BIGBOSS-4 STAR VIJAY

பிக்பாஸ் 4-வது சீசன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 4 தொடங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிக் பாஸ் தமிழில் ஒரு சர்ச்சையைத் ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 16 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த சீசனுக்கான 16 போட்டியாளர்களாக ரம்யா பாண்டியன், சிவானி நாராயணன், ரியோ ராஜ், ஆரி, சம்யுக்தா, அறந்தங்கி நிஷா, கேப்ரியேலா, வேல் மருகன், "ஜித்தன்" ரமேஷ், ஆஜித், ரேகா, அனிதா சம்பத், சோம் சேகர், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.

முதல் வார கேப்டனாக ரம்யா பாண்டியன் உள்ளார். அதன்படி மற்ற போட்டியாளர்கள் சமையல், சுத்தம் செய்வது என அவர்கள் விருப்பப்படி குழுவாக உள்ளனர்.

அதில் சமையல் செய்யும் குழுவில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் என நான்கு பேரும் உள்ளனர். பிக் பாஸ் தொடங்கிய முதலே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையேயான மோதல் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என சுரேஷ் கூற, அதனால் கோபமடைந்த அனிதா நீங்கள் அவ்வாறு கூறியது என்னை காயப்படுத்தியது என்றார்.

மேலும் அப்போது நான் "செய்தியாளர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இருவரும் மாறி மாறி குறும்படத்தில் பார்க்கலாம் எனக் கூறி வருகின்றனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி, தான் குக்கிங் டீமில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். அது தனக்கு விருப்பமில்லை என ரேகா கூற, மறுபுறம் சுரேஷிடம், நீங்கள் இல்லாத குழுவில் நானும் இருக்க மாட்டேன் என சனம் ஷெட்டி கூறுகிறார்.

அதன் பின் அதற்கான காரணம் கேட்டபோது "எனக்கு உங்களுடன் பிரச்னை இல்லை அனிதாவிடம் தான் என கூறுகிறார். அதற்கு அனிதா சம்பத் என்கிட்ட பிரச்னை என்றால் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் எனக் கேட்க, 'உங்களுக்கு நான் சொன்னால் புரியாது, குறும்படம் போட்டு காட்ட வேண்டும்' என கோபத்துடன் கூறுகிறார்.

பட மூலாதாரம், BIG BOSS 4 STAR VIJAY

யார் இந்த சுரேஷ் சக்ரவர்த்தி?

சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்து இருப்பார். 1991ல் வெளிவந்த இந்த படத்தில் மம்மூட்டி, பானுப்ரியா, மது உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார்கள். அவர் அதற்கு பிறகு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார்.

மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார். மேலும் எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார்.

பட மூலாதாரம், BIG BOSS 4 STAR VIJAY

ஏவிஎம் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆக முதலில் பணியை துவங்கியவர் சுரேஷ் சக்ரவர்த்தி. அமலா, கார்த்திக் போன்ற நடிகர்களின் மேனேஜர் ஆகவும் இருந்திருக்கிறார்.அதன் பின் தெலுங்கில் பிரேமா என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தமிழில் வாக்குமூலம் என்ற படத்தில் நடித்தார். அதன் பின் பாலசந்தரின் அழகன், பாலு பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் ஆகிய படங்களில் நடித்தார். வாக்குமூலம் படத்திற்க்கு முன் அழகன் படம் ரிலீஸ் ஆனதால் இவரது முதல் படம் தமிழில் 'அழகன்' சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகர், இயக்குநர் என பல பரிமானங்களில் ஜொலித்திருக்கிறார்.

அனிதா சம்பத் பல ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்து வருகிறார், மேலும் விகடன் விருதுகள் மற்றும் ஹலோ தமீஷா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். ஆதித்யா வர்மா, டேனி உள்ளிட்ட படங்களில் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அவர் ஒரு பிரபலமான யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார் அதில் அவர் அழகு குறிப்பு, பயணம் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார் மற்றும் பார்வையாளர்களுக்கு அவரது வாழ்க்கையைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: