இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜன் - “நான் சாதித்தது எப்படி?”

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜன் - “நான் சாதித்தது எப்படி?”

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அத்தோடு, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல தயாராகி வந்த நடராஜன், தான் கடந்து வந்த பாதைகளையும், ஐபிஎல் தந்த நினைவுகளையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

"மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை நெசவுத்தொழிலாளி, அம்மா சாலையோரத்தில் உணவுக் கடை நடத்திவருகிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டென்னிஸ் பந்தில் விளையாட ஆரம்பித்தேன். இருபது வயதில் தான் முறையாக கிரிக்கெட் பயிற்சியை துவங்கினேன். அப்போது தான் அண்ணன் ஜெயபிரகாஷ் மூலம் சென்னையில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிக்கு பிறகு அடுத்தடுத்து விளையாட வாய்ப்புகள் வந்தன. அப்போது பள்ளி படிப்புக்கு தேவையான புத்தகங்கள் கூட வாங்க முடியாத நிலையில் இருந்தோம். கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து தான் கிரிக்கெட் போட்டிக்கு செல்வேன். இப்படித்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது" என தனது கிரிக்கெட் பயணத்தின் துவக்க காலங்களை வலிகளோடு பகிர்ந்து கொண்டார் நடராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: