60களின் பிரபல பாடகர் ஸ்காட் மெக்கென்ஸி காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஆகஸ்ட், 2012 - 12:25 ஜிஎம்டி
ஸ்காட் மெக்கென்ஸி

ஸ்காட் மெக்கென்ஸி

1960களின் மாபெரும் வெற்றிப் பாடலாகவும், ஹிப்பிக்களின் அடையாள கீதமாகவும் உருப்பெற்ற சான் ஃபிரான்ஸிஸ்கோ என்ற ஃப்ளவர் பவர் ரக பாடலைப் பாடிய பிரபல பாடகர் ஸ்காட் மெக்கென்ஸி, தனது 73ஆம் வயதில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் காலமானார். மிகவும் அரியதோர் நோய்க்கு இவர் பலியாகியுள்ளார்.

காதல் ததும்பும் கோடைக்காலங்களுக்கான ஒரு கீதமாக இந்தப் பாடல் உருப்பெற்றது.

1967ல் மெக்கென்ஸி பாடிய இந்தப் பாடல் ஐக்கிய ராஜ்ஜியத்தில் விற்பனையில் முதலிடத்தையும், அமெரிக்காவில் நான்காம் இடத்தையும் பெற்றிருந்தது.

இந்த மாபெரும் வெற்றியை மெக்கென்ஸியால் தனது பிற பாடல்களில் எட்ட முடியவில்லை.

மொண்டெர்ரேவில் நடந்த பாப் இசைத் திருவிழாவுக்கு முன்பாக எழுதப்பட்ட இந்தப் பாடல், சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் ஃப்ளவர் பவர் இசையைக் கொண்டாடும் விதமாக நடந்த திருவிழாவுக்கு பெரிய விளம்பரமாக அமைந்தது.

ஆனால் இந்தப் பாடலுக்குப் பின்னர் மெக்கென்ஸி இசை உலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார்.

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் மம்மாஸ் அண்ட் பப்பாஸ் இசைக்குழு புது அவதாரம் எடுத்துவந்தபோது அதிலே அவர் பாடியிருந்தார்.

பீச் பாய்ஸ் என்ற பிரபல பாடலை எழுதியவர்களில் மெக்கென்ஸியும் ஒருவர்.

பின்னர் இசை உலகில் இருந்து ஓய்வுபெற்றவராய் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அவர் வாழ்ந்துவந்தார்.

73 வயதான மெக்கென்ஸி தனது வீட்டில் இறந்துகிடந்ததை அண்டை வீட்டுப் பெண் ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தார்.

கடந்த ஒரு வருடமாகவே அவர் மருத்துவமனைக்கு போவதும் வருவதுமாக இருந்தார் என அந்தப் பெண் தெரிவித்தார்.

கீயான் பார்ரே சிண்ட்ரோம் என்ற மூளையையும் நரம்புகளையும் பாதிக்கும் அரிய நோயினால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.