ஹிந்தி திரையுலகின் மூத்த படைப்பாளி யாஷ் சோப்ரா காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2012 - 16:38 ஜிஎம்டி

ஹிந்தி சினிமா நட்சத்திரங்களுடன் யாஷ் சோப்ரா

இந்தியாவின் மூத்த படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான யாஷ் சோப்ரா காலமானார். இவருக்கு வயது எண்பது.

டெங்கிக் காய்ச்சல் வந்திருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடந்த வாரம் இவர் மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஹிந்தி சினிமாவின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவர் யாஷ் சோப்ரா.

இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஐம்பது வருடகாலம் பணியாற்றிய இவர், ஹிந்தி சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத் தந்துள்ளவர்.

காதல் ரசம் சொட்டும் படங்களைத் தந்தமைக்காக புகழ்பெற்றவர் இவர்.

மிக அரிதாகவே காணப்படுகின்ற திறமை கொண்ட படைப்பாளி இவர் என்றும், பல தலைமுறையினரை வசீகரித்த இந்திய சினிமா உலகின் அடையாளச் சின்னம் இவர் என்றும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது இறங்கல் செய்தியில் புழகஞ்சலி செலுத்தியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.