வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள்

வண்ணத்துப் பூச்சியான பழைய மொபைல்கள்

பிரிட்டிஷ் கலைஞர்கள் சிலர் தூக்கிவீசப்பட்ட பழைய டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு அதிசயமான கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

"இஸ் திஸ் குட்" என்ற பெயரில் செயல்படும் கலைஞர்கள் குழு ஒன்று தொழில்நுட்பத்தையும் கலையையும் அழகாகக் கலந்து விநோதமான அதிசயமான பொருட்களை உருவாக்கிவருகின்றனர்.

பழைய டிஜிட்டல் கருவிகளை ரீசைக்கிள் செய்ய வேண்டும் என்று உணர்த்துவதே தமது முயற்சியின் நோக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர்.