' சாச்சா சௌத்திரி ' கேலிச்சித்திரத்தை உருவாக்கிய பிரான் காலமானார்

படத்தின் காப்புரிமை Prans Media Institute
Image caption பிரான் வரைந்த சாச்சா சௌத்ரி கார்ட்டூன்

இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான பிரான் தனது 76 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அவரது மிகப் பிரபலமான கார்ட்டூன் தொடர் 'சாச்சா சௌத்ரிக்காக' அவர் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார்.

அந்தக் கேலிச்சித்திரத் தொடரில், வயதான அந்தச் 'சாச்சா சௌத்ரி' தனது புத்திசாலித்தனத்தின் மூலம், எதிரிகளை வெல்வார்.

பிரான் அவர்கள் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக 1960 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் சிறார்களுக்காக உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டக் கார்ட்டூன்கள் மிகவும் குறைவாக இருந்தன.

Image caption மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் பிரான்

அப்படியானச் சூழலில், இந்தியாவில் மேற்கத்திய காமிக்ஸ்களின் ஆதிக்கத்தை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்தார்.

அறிவார்ந்த, செழுமை மிக்க தனது படைப்புகள் மூலம் பிரான் அவரகள் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு முக்கியமான கருத்துக்களை மையப்படுத்தி படைப்புகளை முன்னெடுக்கவே தான் விரும்புவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிபிசி ஹிந்தி சேவைக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.