நடனப் பயிற்சியில் கெட்டோ கிட்ஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யுகாண்டாவை அசத்தும் சேரிப் பிள்ளைகளின் துள்ளல் நடனம்

  • 6 செப்டம்பர் 2014

யுகாண்டா தலைநகர் கம்பாலாவின் சேரிகளைச் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனக் குழு ஒன்றை உருவாக்கி நாடெங்கிலும் தமது துள்ளல் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றிவருகின்றனர்.

யூடியூப்பில் இவர்கள் வெளியிட்டிருந்த நடன வீடியோ பல லட்சம் பேரால் கண்டு ரசிக்கப்பட்டதை அடுத்து இவர்கள் பிரபலம் அடைந்துள்ளனர்.

வறுமையின் கொடுமையிலிருந்து இவர்களை வெளிக்கொண்டுவர இவர்களது நடன ஆர்வமும் திறமையும் உதவுகிறது.