88  வயதிலும் காலை விரித்து இடுப்பு தரையைத் தொடவைக்க முடிகிறது இவரால்...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

88 வயதில் பாலே - பலே! பாட்டி பலே!

  • 12 செப்டம்பர் 2014

17 வயதில் ஆரம்பித்து தற்போது 88 வயதாகும்போதும் நடனம் ஆடிவருகிறார் பிரிட்டனின் பிரபல பாலே (Ballet) நடனக் கலைஞரான டேம் கில்லியன் லின் (Gillian Lynne) .

கேட்ஸ் (Cats) , ஃபேண்டம் ஒஃப் த ஒபெரா (Phantom of the Opera) போன்ற பிரபல நாட்டிய நாடகங்களில் பங்கேற்றும் நடனம் இயக்கியும் இருந்தவர் இவர்.

இந்த வயதிலும் இவர் முழு நேரமும் ஓய்வின்றி வேலை பார்க்கிறார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில் பங்கேற்றிருந்த ஒரு பாலே நடன நாடகத்தை இவர் இப்போது மீண்டும் உருவாக்கிவருகிறார்.