அமெரிக்க பைசன்கள் - புகைப்படத் தொகுப்பு
வட அமெரிக்காவில் காணப்படும் மிகப் பெரும் பாலூட்டி விலங்கினமான பைசன்கள் பற்றிய புகைப் படத் தொகுப்பு.
-
அமெரிக்கன் பைசன் அல்லது அமெரிக்க எருமைதான் வட அமெரிக்காவில் காணப்படும் மிகப் பெரும் பாலூட்டி விலங்கினம்.
-
வட அமெரிக்காவின், புல்வெளிகளிலும் , புதர் காடுகளிலும் இந்த வகை விலங்குகள் அதிகம் வாழ்ந்து வந்தன.
-
தற்போது சரணாலயங்களிலும். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலுமே இவ்விலங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.
-
இவற்றின் கண் பார்வை மோசமானது என்றாலும், இதன் மோப்ப சக்தி அதிகம். இதன் பெரிய உடல் அமைப்பு இதற்குப் பாதுகாப்பை அளிக்கிறது
-
இவ்வகை மாடுகளின் குட்டிகளால் பிறந்த சில மணிநேரத்திலேயே, நடக்கவும் ஒடவும் இயலும்
-
ஹைடி மற்றும் ஹான்ஸ் ஜூகன் கோச் ஆகிய இரு புகைப்படக் கலைஞர்களின் முயற்சியால் உருவான பவல்லோ பலாட் என்ற புத்தகம் எடிஷன் லமெர்ஹூபர் நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.