இலங்கையின் மூத்த இலக்கியவாதி காவலூர் ராஜதுரை காலமானார்

  • 15 அக்டோபர் 2014
இலங்கையின் மூத்த  இலக்கியவாதியான காவலூர்  ராஜதுரை காலமானார்
Image caption காவலூர் ராஜதுரை காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார்.

இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இவர் முன்னர் பணியாற்றியுள்ளார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்ட காவலூர் ராஜதுரை அவர்களின், கதை வசனத்தில் வெளியான ''பொன்மணி'' திரைப்படம் இலங்கையில் தயாரான தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தனது இறுதிக் காலத்தில், காவலூர் ராஜதுரை பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பினராகவும் காவலூர் ராஜதுரை செயற்பட்டுவந்தார்.

சிறுகதை, விமர்சனம், கட்டுரை, விளம்பரம் முதலான துறைகளிலும் சிறந்து விளங்கிய அவர் சில நூல்களையும் எழுதியுள்ளார்.