'பாப்பிசை பிரபலங்களுக்கு ஆயுள் குறைவு என்பது உண்மை தான்'

படத்தின் காப்புரிமை Getty
Image caption 27 வயதில் உயிரிழந்த பாடகி எமி வைன்ஹவுஸ்

புகழின் உச்சத்தைத் தொடுகின்ற பாப்பிசை பாடகர்கள் மற்றவர்களை விட கூடிய சீக்கிரத்திலேயே உயிரிழந்துவிடுகிறார்கள் என்று பொதுவாக இருந்துவந்த கருத்தொன்றை புதிய ஆய்வொன்றும் உறுதிசெய்துள்ளது.

அமெரிக்காவில் ராக் 'என்' ரோல் இசை உருவாகிய காலந்தொட்டு, கடந்த சுமார் 6 தசாப்தங்களில், உயிரிழந்துள்ள சுமார் 3000 அமெரிக்க இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து இந்தக் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் ஆயுள்காலம், சக அமெரிக்கர்களின் ஆயுள்காலத்தை விட 25 ஆண்டுகள் குறைவாகவே இருந்துள்ளதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

பாப்பிசை பிரபலங்களின் மத்தியில் தற்கொலைகளும் கொலைகளும் விபத்து- மரணங்களும் சராசரி அளவைவிட அதிகளவில் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.