"மெல்லிசை மன்னர்" எம் எஸ் விஸ்வநாதன் காலமானார்

மறைந்த இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன்
Image caption மறைந்த இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன்

இந்தியத் திரைப்படத்துறையில் இசையமைப்பதில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த எம் எஸ் விஸ்வநாதன் செவ்வாய் அதிகாலை சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 88.

தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்துக்கும் அவரே இசையமைத்துள்ளார்.

நான்கு முதலமைச்சர்களுடன் திரையுலகில் அவர் பணியாற்றினார் எனும் பெருமையும் எம் எஸ் விக்கு உண்டு.

தமிழ்த் திரையுலகில் காலஞ்சென்ற டி கே ராமமூர்த்தியுடன் இணைந்தும் தனியாகவும் ஏராளமான திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எம் எஸ் வி அவர்களும் டி கே ராமமூர்த்தி அவர்களும் மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.