ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாட்டொன்று கேட்டேன்: 18 ஆம் பாகம்

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – இராமமூர்த்தி ஆகியோர் தமிழ்த் திரை இசைக்கு ஆற்றிய பங்களிப்பை "பாட்டொன்று கேட்டேன்" சித்திரத்தொடரின் பதினெட்டாம் பாகத்தில் விளக்குகிறார் சம்பத்குமார்.

தமிழ்த்திரைப்படத்துறையின் மெல்லிசைக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்று வர்ணிக்கப்படும் இந்த இரட்டையர்கள், இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என்கிறார் விஸ்வநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய ஜி.எஸ். மணி.

மேற்கத்திய இசையில் அதிக வல்லமை பெற்ற விஸ்வநாதன், மேற்கத்திய இசையின் பல நுணுக்கங்களை தமிழ் சினிமா இசையமைப்பில் புகுத்தினார் என்றும் அவர் கூறுகிறார்.

தனது இளமைக் காலத்தில், தான் முற்றிலும் விஸ்வநாதனின் இசையில் லயித்துப் போயிருந்ததாக கூறும் இசையமைப்பாளர் இளையராஜா, எம்.எஸ்.வி- கவிஞர் கண்ணதாசன் கூட்டணியானது பிரிக்க முடியாத அற்புதமான ஒன்று என்றும் வர்ணிக்கிறார்.