ஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ

இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ நடிக்கவிருக்கிறார். அவர்கள் இருவரும் இணையும் ஆறாவது படம் இதுவாகும்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 2010ல் இந்தக் கதையைப் படமாக்கும் உரிமையைப் பெற்றார் டிகாப்ரியோ.

எரிக் லார்ஸன் 2003ல் எழுதிய தி டெவில் இன் த ஒயிட் சிடி நாவல்தான் இந்தப் புதிய படத்தின் கதை.

இந்தக் கதையில், தொடர் கொலைகளைச் செய்யும் டாக்டர் எச்எச் ஹோம்ஸாக டி காப்ரியோ நடிக்கவிருக்கிறார்.

1893ல் சிகாகோவில் நடந்த சர்வதேச கண்காட்சியில் ஆட்களைக் குறிவைத்துத் தேர்வுசெய்யும் ஹோம்ஸ், அவர்களை கொலை செய்தார். அவர் 27 பேரை கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மார்ட்டின் ஸ்கார்ஸஸியும் டிகாப்ரியோவும் இணையும் ஆறாவது படம் இதுவாகும்.

ஆனால், பிற்காலத்தில் 200 பேர் வரை ஹோம்ஸால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்பட்டது.

இதற்கு முன்பாக ஸ்கார்ஸஸியும் டி காப்ரியோவும் தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், தி டிபார்ட்டட், கேங்ஸ் ஆஃப் நியூ யார் ஆகிய படங்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

2010ஆம் ஆண்டில் இந்தக் கதையை படமாக்கும் உரிமையை டிகாப்ரியோ வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை கேப்டன் ஃபிலிப்ஸ், ஹங்கர் கேம்ஸ் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பில்லி ரே எழுதுகிறார்.