ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூசான் திரைப்பட விழாவில் போட்டியிடும் "ரேடியோ பெட்டி"

  • 27 ஆகஸ்ட் 2015

வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரேடியோ பெட்டி என்ற திரைப்படம் தென் கொரியாவின் பிரபலமான பூசான் திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

சரியாகக் காது கேட்காத ஒரு முதியவர் பழைய வானொலியை சத்தமாக வைத்துக் கேட்பதும் அதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுமே இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளன என்கிறார் படத்தின் இயக்குனரான ஹரி விஸ்வநாத்.

பூசான் திரைப்பட விழாவைப் பொறுத்தவரை, முதன் முதலாகப் போட்டிக்கெனத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் இது என அப்படத்தின் இயக்குனர் கூறுகிறார்.

இப்படத்தின் இயக்குநர் ஹரி விஸ்வநாத் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்யேகப் பேட்டியை இங்கு கேட்கலாம்