மங்கலஇசைக் குழு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் மூன்றாம் பகுதி

  • 27 செப்டம்பர் 2015

இந்தியாவில் பெரும்பாலும் ஆலயங்களை ஒட்டியே வளர்ந்த மங்கல இசைக்கு சாதிகளைக் கடந்து தமிழ் சமூகத்தில் முக்கியமானதொரு இடமுள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

மங்கல இசை மரபு மற்றும் கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் எல்லைகளைக் கடந்து பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் வியாபித்துள்ளன.

இந்து மதத்தில் பல வாத்தியங்கள் பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக கலைமகளுடன் வீணையும், கிருஷ்ணருடன் புல்லாங்குழலும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.

ஆனால் அந்த தெய்வங்களுக்கான ஆலயங்களில் வீணையோ, புல்லாங்குழலோ ஆலய நிகழ்வுகளில் இசைக்கப்படுவதில்லை. மாறாக எந்த தெய்வத்துக்குரிய ஆலயமாக இருந்தாலும் மங்கல இசை என்பது அந்த ஆலய நிகழ்வுகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டதாகவுள்ளது.

வேறெந்த இசைக் கருவிகளுக்கும் இல்லாத தனிச் சிறப்பு தென் இந்தியாவில் மங்கலை இசை வாத்தியங்களான நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கும், வட இந்தியாவில் ஷெஹனாய் மற்றும் தபலாவுக்கும் உள்ளன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

கருவிகளின் வகைகள்

இந்தியாவில் இசைக் கருவிகள் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆய்வுகளும் சான்றுகளும் காட்டுகின்றன.

மங்கல நிகழ்வுகள், அமங்கல நிகழ்வுகள் மற்றும் போர்க்களத்தில் வீர உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய இசைக் கருவிகள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன.

நாகஸ்வரத்தின் வடிவமைப்பும் தொடர்ச்சியாக பல மாறுதல்களைக் கண்டுள்ளன.

இசை அறிஞர்கள் பி.எம்.சுந்தரம், குடவாயில் பாலசுப்ரமணியம், அண்மையில் காலஞ்சென்ற 'தேனுகா' ஸ்ரீநிவாசன் ஆகியோரின் கருத்துக்களைக் இந்தப் பகுதியில் கேட்கலாம்.

மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரைத் தயாரித்து வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்.