நாகஸ்வரத் தயாரிப்பு நலிவடைந்து வருகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் ஆறாம் பகுதி

  • 25 அக்டோபர் 2015

நாகஸ்வரத்தின் தயாரிப்பு இதர காற்றிசைக் கருவிகளிடமிருந்து சற்றே வித்தியாசமானது.

இசை வட்டாரங்களில் நாகஸ்வரம் ராஜ வாத்தியம் அல்லது ராட்ச வாத்தியம் என்றெல்லம் கூட அழைப்படுகிறது.

நாகஸ்வரம் என்பது கடையில் வாங்கி மனையில் வைக்கும் விஷயம் அல்ல என்றும் ஒவ்வொரு கலைஞருக்கும் ஏற்றவகையில் அது வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் வித்வான்களும், அதை தயாரிப்பவர்களும் கூறுகிறார்கள்.

பல்வகைகளில் சிறப்பு பெற்ற நாகஸ்வரத்தை தயாரிக்கும் கலைஞர்களுக்கு இன்றளவும் சமூகத்தில் உரிய அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாக உள்ளது.

நாகஸ்வரத் தயாரிப்பில் தனி இடம் பெற்றது கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நரசிங்கம்பேட்டை கிராமம். அண்மையில் நரசிங்கம்பேட்டையில் தயாரிக்கப்படும் நாகஸ்வரங்களுக்கு புவிசார் காப்புரிமையும் அளிக்கப்பட்டுள்ளது.

பல கலைஞர்கள் இன்று புதிய வாத்தியங்களைத் தயாரிப்பதை விடுத்து, உடைந்துபோன அல்லது பழுதடைந்த நாகஸ்வரத்தை செப்பனிடுவதை நம்பியே காலத்தை ஓட்டவேண்டியுள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது.

இனிவரும் காலங்களில் நாகஸ்வரத்தை தயாரிக்க கலைஞர்கள் இருப்பார்களா எனும் கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

நாகஸ்வரத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்கள்,அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஆகியவை குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இந்தப் பகுதியில் கேட்கலாம்.