ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறைந்து வரும் மங்கல இசை: சிறப்புத் தொடர் பகுதி 7

  • 1 நவம்பர் 2015

மங்கல இசைக் கருவிகளான நாகஸ்வரமும் மற்றும் தவிலும் ஆகியவை இணைபிரியாதவை.

ஆலய விழாக்கள், இசை நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் அது மேளக் கச்சேரி அல்லது நாகஸ்வரக் கச்சேரி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அந்த நிகழ்வுகளில் முதலாவதாக ஒலிப்பது தவில்தான்.

ஆலயங்களில் உற்சவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் யமபேரி என்று இசை நூல்களில் குறிப்பிடப்படும் தவிலுக்கு தனியாக பூசை செய்யப்பட்ட பின்னரே கொடியேற்றம் நடைபெறும் என்றும், உற்சவ காலம் முடிந்து கொடியிறக்கம் செய்யப்படும்போதும் தவிலுக்கு பூசைகள் நடைபெறும் என்பதும் ஆலயக் குறிப்புகள், ஆகம சாஸ்திரங்கள் மற்றும் இசை நூல்கள் ஆகியவற்றில் காண முடிகிறது.

தவிலுக்கு வேறு பல பெயர்களும் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்று கூறுகிறார் இசை ஆர்வலரும் தமிழிசை ஆய்வாளருமான நா மம்மது.

Image caption அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தவில் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சாமிநாத ஆசாரி

நாகஸ்வரத்துக்கு மட்டுமே துணை வாத்தியமாக இசைக்கப்பட்ட தவிலை, சில கலைஞர்கள் வேறு பல வாத்தியங்களுடன் இசைக்கும் முயற்சியை முன்னெடுத்தனர். ஆனால் அவை பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

நாகஸ்வரம் மற்றும் தவில் இசை இன்றளவும், பெரும்பாலும் இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தே உள்ளது. அதுவே மங்கல இசையின் பலமாகவும், பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது.

வேறு சில சமூகத்தவரும் மங்கல இசையை கற்க முயன்றுள்ளார்கள். ஆனால் அவர்களால் பெரிய அளவில் பரிமளிக்க முடியவில்லை என்கிறார் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலரும் எழுத்தாளருமான நாகராஜன் சிவராமகிருஷ்ணன்.

இப்படி கம்பீரமாக பல நூற்றாண்டுகளாக தமிழ் சமூகத்தில் ஒலித்த இந்த இசை இன்னும் எவ்வளவு காலம் தனது கம்பீரத்தையும் சமூகத்தில் தனது இடத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் எனும் மிகப்பெரிய கேள்வி இன்று எழுந்துள்ளது.

தவில் தயாரிப்பிலுள்ள நுணுக்கங்கள், அதில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலை ஆகியவை குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரில் இப்பகுதியில் கேட்கலாம்.