ஷேக் சுபானி-காலிஷாபீ தம்பதியினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறைந்து வரும் மங்கல இசை: 11ஆம் பகுதி

  • 6 டிசம்பர் 2015

தமிழகத்தில் பாரம்பரிய இசைக்கு இஸ்லாமியர்களின் பங்கு தொடர்ந்து இருந்துள்ளதற்கு பல சான்றுகள் உள்ளன.

கடந்த பல தசாப்தங்களை ஒப்பிடும்போது இன்று மங்கல இசையைப் பொருத்தவரையில் வெகு சில இஸ்லாமியர்களே அதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் ஷேக் சின்ன மௌலா அவர்களின் வாரிசுகளான காசிம்பாபு சகோதரர்கள் மற்றும் ஷேக் சுபானி மற்றும் காலிஷாபீ தம்பதியினர்.

நாகஸ்வர உலகில் ஷேக் சுபானி மற்றும் காலிஷாபீ தம்பதியனருக்கு தனியிடம் உள்ளது என பிபிசி தமிழோசையிடம் கூறினார் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலரான நாகராஜன் சிவராமகிருஷ்ணன்.

பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நடத்தும் தொழுகையில் இசை பின்னிப் பிணைந்துள்ளது எனக் கூறும் ஷேக் மஹ்பூப் சுபானி, இஸ்லாத்தில் இசைக்கு இடமில்லை எனக் கூறுவது தவறு என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கருத்துடன் முற்றாக உடன்படுகிறார் அவரது மனைவி காலிஷா பீ

படத்தின் காப்புரிமை the hindu
Image caption ஷேக் மஹ்பூப் சுபானி-காலிஷாபீ தம்பதியினர்

நாகஸ்வரக் கலைஞர்கள் இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள் எனவும் அந்த தம்பதியினர் கூறுகின்றனர்.

இஸ்லாமிய சமூகத்தில் கலை வெளிப்பாடுகளுக்கு எப்போதும் இடமிருந்துள்ளது, அது அண்மைக் காலத்திலேயே பலவிதமான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன என பிபிசி தமிழோசையிடம் கூறினார் மதுரையிலுள்ள இசை ஆர்வலரும் அறிஞருமான நா மம்மது.

இவ்வளவு சிறப்பும் பாரம்பரியமும் கொண்ட மங்கல இசை இன்று மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது.

மாறிவரும் சமூகச் சூழல், போதிய ஆதரவின்மை போன்ற பல காரணங்களால் தமிழர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான நாகஸ்வர இசையின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

மங்கல இசைக்கு இஸ்லாமியர்களின் மேலும் சில பங்களிப்பு குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் இத்தொடரின் இப்பகுதியில் கேட்கலாம்.