பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய கை ஹாமில்டன் காலமானார்

  • 21 ஏப்ரல் 2016

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சிலவற்றை இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் கை ஹாமில்டன் தனது 93ஆவது வயதில் காலமானார்.

படத்தின் காப்புரிமை EON PRODUCTIONS
Image caption இந்த மூன்றண்கள் திரையுலகில் மிகவும் பிரபலமானது

ஷான் கானரி நடித்த கோல்ட் ஃபிங்கர் மற்றும் டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார்.

பின்னர் ரோஜர் மூர் நடித்த லிவ் அண்ட் லெட் டை மற்றும் மேன் வித் தி கோல்டன் கன் ஆகியப் படங்களையும் இயக்கியுள்ள கை ஹாமில்டன் மத்தியதரை கடலில், ஸ்பெயினினுக்கு சொந்தமான மயோக்ரா தீவில் காலமானார்.

படத்தின் காப்புரிமை
Image caption ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஷான் கானரி

தனது திரை வாழ்க்கையின் முற்பகுதியில், அவர் தர்ட் மேன் திரைப்படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

அந்தப் படத்தில் இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸுக்கு துணை இயக்குநராக இருந்தபோது, வியன்னா நகரில் இடம்பெறும் பரபரப்பு மிக்க காரில் துரத்தும் காட்சிகளை படமாக்கியிருந்தார்.