புதிய ஆங்கில அகராதியில் பிரிட்டன் நாவலாசிரியரின் புது சொற்கள்

ஃபுரேஸ்கோட்டில் (Frobscottle), ஸ்குயிஷஸ் (squishous), ஒன்டர்கிரம்ப் (wondercrump) ஆகிய, ருவால் டால் (Roald Dahl) என்ற பிரிட்டிஷ் சிறார்கள் புதின ஆசிரியரால் குழந்தைகளின் புத்தகங்களில் பயன்படுத்தப்படும் சில சொற்கள், புதிதாக வரவிருக்கும் அகராதியில் இடம் பெறவுள்ளன.

படத்தின் காப்புரிமை Thinkstock

தொகுப்பதற்கு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் இந்த புது அகராதியில் ருவால் டால் பயன்படுத்திய ஏறக்குறைய எட்டாயிரம் சொற்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் பல உண்மையான மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சொற்களாகும்.

படத்தின் காப்புரிமை istock

‘சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும்’ (Charlie and the Chocolate Factory) மற்றும் ‘மெட்டில்டா’ (Matilda) போன்ற சிறுவர் புதினங்களை எழுதிய ருவால் டால், பல சந்தர்ப்பங்களில் வாசகர்களை மகிழ்விப்பதற்காக வார்த்தைகளை கலப்பது, தலைகீழாக எழுத்துக்கூட்டுவது மற்றும் எழுத்துக்களை இடம் மாற்றுவது போன்ற உத்திகளைக் கையாளுவார்.

ஸ்குரும்டிட்லியும்பிசியஸ் (Scrumdiddlyumptious) என்ற சொல் ஓர் எடுத்துக்காட்டு.