பிரிட்டன் ஓவியரின் படைப்புகளை திருடியதாக ஐயப்படும் ஏழு பேர் கைது

பிரிட்டன் ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை PA
Image caption இருபத்தி ஏழு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான மதிப்புடைய ஓவியங்கள் திருட்டு

இந்த ஓவியங்கள் இருபத்தி ஏழு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக மதிப்புடையவை என தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இறந்துபோன பேக்கனின் நண்பர் உரிமையாக வைத்திருந்த இந்த ஓவியப் படைப்புகள் கடந்த ஜூலை மாதம் மாட்ரிட்டில் வைத்து திருடப்பட்டன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐந்து ஓவியங்களை இன்னும் மீட்க வேண்டியுள்ளது

அவற்றில் ஐந்து ஓவியங்கள் மீட்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை christies

திருடப்பட்ட இந்த ஓவியங்களின் மூல விபரங்களை கேட்டு மின்னஞ்சலை பெற்ற பிரிட்டிஷ் நிறுவனம் தங்களை தொடர்பு கொண்டபோது, ஓவியங்களை மீட்கும் புலனாய்வில் திருப்புமுனை ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.