வடகொரிய ஏவுகணை முயற்சி மீண்டும் தோல்வி

வடகொரியா இன்னுமொரு ஏவுகணையை ஏவ முயன்றதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு துறைமுகமான வோன்சானுக்கு அருகே இது நடந்ததாக தெரிவித்த தென்கொரிய இராணுவ அமைச்சக பேச்சாளர், அது குறித்த மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

ஏவுகணை சோதனைகளுக்கு முன்னதாகவே ஜப்பான் தனது இராணுவத்தை உஷார் நிலையில் வைத்திருந்தது. அந்த பிராந்தியத்தின் மற்ற நாடுகளும் வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கைகளால் கவலைய்டைந்துள்ளன.