அமெரிக்க கீபோடு இசைக்கலைஞர் நுரையீரல் புற்றுநோயால் மரணம்

நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்று வந்த அமெரிக்க கிபோடு இசைக்கலைஞர் பெர்னியே வோர்ரெல் தன்னுடைய 72-வது வயதில் காலமாகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை thinkstock

இவர் பாடகர் ஜார்ஜ் கிளிண்டனுடன் சேர்ந்து பார்லிமென்ட் அன்ட் ஃபுன்கடெலிக் கலைக்டிவ் இசைக்குழுவோடு புதுமையான ஃபங்க் இசை சிலவற்றை படைப்பதில் ஈடுபட்டவர்.

இசைப்பலகை வாசிப்பதில் வல்லவரான வோர்ரெலை, இசைப்பலகை ஜாம்பவானான ஜிமி ஹென்றிஸோடு ஒப்பிட்டு இசைக்குழுவினர் புகழ்கின்றனர்.

மதர்ஷிப் கனைக்ஷன் மற்றும் மாக்கோட் பிரேன் போன்ற பல பாடல் தொகுப்புகளில் உள்ளது போல, இசைக்குழுவிற்கு அதனுடைய தனிதன்மையான, காலம் கடந்து செல்லுகின்ற இசையை வழங்குவதற்கு வோர்ரெல் தன்னுடைய சாஸ்திர இசைப் பயிற்சியை பயன்படுத்தி கொண்டார்.

பின்னர் அவர் நியூயார்க் இசைக்குழுவான டாக்கிங் ஹெட்ஸ் –உடன் பணியாற்றினார். பல தனிப்பட்ட இசை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.