பாப் இசை நட்சத்திரம் பிரின்ஸின் எல்லோ கிளெடு கிட்டார் ஏலம்

மறைந்த பாப் இசை நட்சத்திரம் பிரின்ஸ் உரிமையாக வைத்திருந்து, வாசித்த எல்லோ கிளெடு நிறுவனம் தயாரித்த மின்சார கிட்டார் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 137,500 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை APHeritage Auctions
Image caption பாப் இசை நட்சத்திரம் பிரின்ஸூக்கு சொந்தமான, வாசித்த எல்லோ கிளெடு மின்சார கிட்டார் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது

ஹெரிடேஜ் ஆக்ஸன்ஸ் என்ற ஏல நிறுவனம் பிவர்லி ஹில்லில் நடத்தியுள்ள ஏலத்தில் விலைபோயுள்ள தகவமைக்கப்பட்ட இந்த கிட்டார், இசைக் கலைஞர் பிரின்ஸ் மிகவும் விரும்பிய இசைக்கருவியாகும்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஹெரிடேஜ் ஆக்ஸன்ஸ் என்ற ஏல நிறுவனம் இந்த எல்லோ கிளெடு கிட்டாரை ஏலத்தில் விட்டுள்ளது,

இந்தியன்போலிஸ் கல்ட்ஸ் என்ற அமெரிக்க கால்பந்து அணியின் உரிமையாளரான ஜிம் இர்சே இதனை ஏலத்தில் வாங்கியிருப்பதாக அசோசியேட்டடு பிரஸ் என்ற செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இசை நட்சத்திரம் பிரின்ஸின் எல்லோ கிளெடு கிட்டாரை இந்தியன்போலிஸ் கல்ட்ஸ் அமெரிக்க கால்பந்து அணியின் உரிமையாளர் ஜிம் இர்சே வாங்கியுள்ளார்

இசை நட்சத்திரமான பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதன் காணரமாக ஏப்ரல் மாதம் மின்னசோட்டா இல்லத்தில் வைத்து இறந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இசை நட்சத்திரம் பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டதால் ஏப்ரல் மாதம் இறந்தார்

எல்லோ கிளெடு நிறுவனம் தயாரித்த இந்த கிட்டார் இசைக்கருவியானது 1980-களில் மின்னசோட்டா நட்-குருப்பீ என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, 1990-களின் பாதி வரை பல இசைக் கச்சேரிகளில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.