‘த டீர் ஹன்டர்‘ திரைப்பட இயக்குநர் காலமானார்

  • 3 ஜூலை 2016

அமெரிக்க திரைப்பட இயக்குநர் மைக்கேல் சிமினோ தன்னுடைய 77-வது வயதில் காலமாகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption த டீர் ஹன்டர் திரைப்படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது

வியட்நாம் போரை விவரிக்கும் திரைப்படமான “த டீர் ஹன்டர்” என்பதில் ராபர்ட் டி நிரோ மற்றும் கிறிஸ்டோபர் வால்கனுக்கு இடையில் நடைபெறும் ரஷிய சூதாட்ட சுழல் காட்சியை உள்ளடக்கி மைக்கேல் சிமினோ மிகவும் புகழ்பெற்றார்.

சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் உள்பட 5 ஆஸ்கார் விருதுகளை 1978 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வென்றது.

படத்தின் காப்புரிமை AP
Image caption நிதி நிலைமையில் பேரழிவை உருவாக்கிய ஹெவன்ஸ் கேட் திரைப்படம் மைக்கேல் சிமினோவின் தலைசிறந்த படைப்பாக உள்ளது

இந்த வெற்றியை தொடர்ந்து, 'ஹெவன்ஸ் கேட்' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார்.

ஆனால் அப்படம் படுதோல்வி அடைந்து, யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோ என்ற அந்த படத்தயாரிப்பு நிறுவனம் ஏறக்குறைய திவாலாகி நிதி நிலைமையில் பேரழிவு ஏற்பட்டது.

ஆனால், பின்னர் இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பு என்று புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.