600 பணிகள் வெட்டு: நட்டத்தில் கேத்தே பசிபிக் விமான சேவை?

  • 23 மே 2017

கடந்த 20 ஆண்டுகளில் நடக்கும் மிகப்பெரிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஹாங்காங்கை சேர்ந்த விமான போக்குவரத்து நிறுவனமான கேத்தே பசிபிக், தனது நிறுவனத்தில் கிட்டத்தட்ட 600 பணியாளர்களை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

ஹாங்காங்கில் உள்ள தங்களின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் 190 மேலாண்மை பணியாளர்கள் மற்றும் மேலாண்மை நிலை இல்லாத பணியாளர்கள் 400 பேர் ஆகியோர் கேத்தே பசிபிக் நிறுவனம் அறிவித்துள்ள பணி வெட்டில் அடங்குவர்.

கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக நஷ்ட அறிக்கையாக அமைந்த தங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கையை வெளியிட்ட கேத்தே பசிபிக், தங்களின் தலைமை அலுவகத்தில் பணியாளர்களுக்கான செலவுகளில் 30 சதவீதத்தை சேமிக்கப் போவதாக மார்ச் மாதத்தில் தெரிவித்தது.

தாங்கள் உத்தேசத்துள்ள பணி வெட்டுக்கள் இந்த ஆண்டின் முடிவில் முடிவடையும் என்று தெரிவித்த விமான சேவை நிறுவனம், பணி வெட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பணியாளர்களுக்கு திங்கள் கிழமையும், அடுத்த மாதத்திலும் இத்தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யும் வகையில் திட்டமிடப்பட்ட மூன்றாண்டு திட்டத்தில் இந்த பணி வெட்டுக்கள் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றன.

கடினமான ஆனால் தேவையான நடவடிக்கை

கேத்தே பசிபிக் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள், இந்நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியான ரூபர்ட் ஹாக்கின் மேற்பார்வையில் நடைபெறும்.

முன்னதாக, இந்த மாத துவக்கத்தில் முன்னாள் தலைமை அதிகாரியான இவான் சூ வோக்-லெங்குக்கு பதிலாக ரூபர்ட் ஹாக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கேத்தே பசிபிக் நிறுவன தலைமை அதிகாரி ரூபர்ட் ஹாக்

அதிகரித்து வரும் போட்டி மற்றும் சவால் தரும் வகையில் அமைந்துள்ள வணிக சூழல் ஆகியவற்றை கேத்தே பசிபிக் நிறுவனம் மேற்கொண்டுள்ள பணி வெட்டுக்கு காரணங்களாக சுட்டிக்காட்டியுள்ள ஹாக், ''இந்த முடிவுகள் கடினமானவையாக தோன்றினாலும் நமது நிறுவனத்தின் வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் இவை '' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக விரிவடைந்து வரும் சீன மற்றும் மத்திய கிழக்கு விமான சேவை நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை கேத்தே பசிபிக் நிறுவனம் சந்தித்து வருகிறது.

பிற செய்திகள் :

பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி

மணமேடையில் துணிச்சலைக் காட்டிய புதுமைப் பெண்கள்

சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்