இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம் அதிகரிப்பு

  • 31 மே 2017

2016-17 நிதியாண்டின் இறுதி காலாண்டில், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம் 6.1 சதவீதம் வளர்ந்துள்ளதாக நாட்டின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம் அதிகரிப்பு (கோப்புப் படம்)

அண்மைய இந்திய பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்கள் சில மதிப்பீடுகளை தவறவிட்டிருக்கலாம்.

ஆனால், அது பெரிய வியப்பை அளிக்கவில்லை.

புழக்கத்தில் இருந்த 86 சதவீத வங்கி நோட்டுக்கள் மீதான தடை இந்திய பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைத்துறை ஆகிய பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் இக்காலகட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தரவுகள் பொருளாதார வளர்ச்சி மீட்பு எதிர்பார்த்ததை விட வேகமாக இருந்துள்ளதை காண்பித்துள்ளன.

ஆனபோதிலும், இந்த அண்மைய புள்ளி விவரங்கள் இந்திய பொருளாதாரத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

தற்போது வெளியிடப்பட்ட இந்திய பொருளாதார வளர்ச்சி தரவு, சிறு வணிகங்கள் மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளின் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேலாக இவ்விரு துறைகளும் உள்ளன.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் இத்துறைகள்தான் மிக மோசமாக பாதிக்கபட்டுள்ளன. பல சிறிய நிறுவனங்கள் இன்னமும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்:

பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற மாணவர் தாக்கப்பட்டது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்