சீனா உருவாக்கும் புதிய துபாய்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா உருவாக்கும் புதிய துபாய்

  • 1 ஜூன் 2017

இது கொர்கோஸ் கேட்வே. கசகஸ்தானின் புதிய வர்த்தக முனையம்.

சீனா உருவாக்க முயலும் பிரம்மாண்ட வர்த்தக வலையமைப்பின் ஒரு அங்கம் இந்த கொர்கோஸ் கேட்வே.

மத்திய ஆசியாவின் மூலையில் உள்ள இந்த இடம் புதிய பட்டுப்பாதையின் முக்கிய மையமாக உருவாகவிருக்கிறது.

கசகஸ்தான் ரயில்களும் சீன ரயில்களும் தனித்தனி பாதைகளில் பயணிக்கின்றன.

ஐரோப்பாவுக்கு செல்லும் ரயில்களில் ஏற்றுவதற்கான சரக்குகளை சீன ரயில்கள் இங்கே இறக்கி வைக்கின்றன.

“சீனா உருவாக்கும் புதிய பட்டுப்பாதையில் கிழக்கும் மேற்கும் சந்திக்கும் மையப்புள்ளி இது”, என்கிறார் கொர்கோஸ் கேட்வேயின் நிறுவன தலைமை நிர்வாகி கார்ல் கெய்சன்.

கண்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைக்கு இணையாக இந்த ரயில்பாதையும் அமைந்துள்ளது.

இங்கே கசகஸ்தான் அரசு புதிய நகரை உருவாக்கியிருக்கிறது. அதன்மூலம் தொழிலாளர்களை ஈர்க்க முயல்கிறது.

இலவச வீட்டுவசதி, அதிகமான சம்பளம், சிறந்த பள்ளிக்கூட வசதியெல்லாம் உறுதியளிக்கப்படுகிறது.

இப்போதைக்கு இது துபாய் அளவுக்கு வசதியானதாக, உலக வர்த்தகத்தின் கவனத்தை கவர்ந்திழுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலக தரத்திலான புதிய நகர்ப்புற வர்த்தகமையம் ஒன்று இங்கே உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்