இந்தியாவின் நிலவுப் பயணம் 2.0

இந்தியாவின் சந்திரயான்-2 நிலவை எப்படி சென்றடையும்?

இது ஜிஎஸ்எல்வி மார்க்-III

இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டத்தின் ஏவுகலன் இதுதான்.

இந்த ஏவுகலனில் சுற்றுவட்ட ஊர்தி ஒன்றும், நிலவில் இறங்கும் ஊர்தி ஒன்றும் உள்ளன.

கட்டம் 1: ஏவுதல்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ஏவுகலன் விண்ணில் செலுத்தப்படும்.

கட்டம் 2: பிரிதல்

எஸ்200 ஸ்ட்ராப்-ஆன் ராக்கெட்கள் கழன்று விழுகின்றன.

மேல் முனை பிரிகிறது.

எல்110 இரண்டாவது-கட்ட ராக்கெட் பிரிகிறது.

சந்திரயான் 2 ஒருங்கிணைந்த தொகுதி பிரிகிறது.

கட்டம் 3: நிலவுக்குப் பயணம்

கட்டம் 4: நிலவின் சுற்று வட்டப் பாதையில் நுழையும் தொகுதி

சுற்று வட்ட தொகுதியில் இருந்து நிலவில் இறங்கும் கலன் பிரிகிறது.

இறுதிக் கட்டம்: நிலவில் இறங்குதல்

நிலவின் தென் துருவத்திற்கு அருகில் இந்த கலன் தரையிறங்கும்.

இந்த பகுதிகளில்தான் இதற்கு முன்னரும் கலன்கள் தரையிறங்கியுள்ளன.

விக்ரம் என்கிற தரையிறங்கு கலன் சுமார் 70°அட்சரேகைக்கு தெற்கில் தரையிறங்க முயற்சிக்கும்.

நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ‘விக்ரம்’, ரோவர் ஊர்தியை சுமந்து செல்கிறது.

‘பிரக்யான்’ என்கிற இந்த ஆறு சக்கர ரோபோ ஊர்தி நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று, படங்கள் பிடிக்கும்.

Reporter: Shadab Nazmi
Illustrations: Puneet Kumar
Information source: Indian Space Research Organization